தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் பல படங்களில் நடித்தவர் ஆனந்தராஜ். கூட்டத்தில் ஒருவராக வந்து கதாநாயகனிடம் அடி வாங்கியவர் ஒரு கட்டத்தில் மெயின் வில்லனாகவும் மாறினார். விஜயகாந்த் படம் என்றால் கண்டிப்பாக அவருக்கும், விஜயகாந்துக்கும் இடையே ஒரு சண்டை காட்சி கண்டிப்பாக இருக்கும். அதன்பின், சத்தியராஜ், சரத்குமார், பிரபு போன்ற நடிகர்களுடன் ஒரு சண்டை காட்சியில் வருவார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பொன்னம்பலம் நடித்துள்ளார்.

பல படங்களில் டெரர் வில்லனாக கலக்கி ரசிகர்களை பயமுறுத்தியவர் இவர். ஆனால், கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கையும் வைத்தார்.
இதையும் படிங்க: விஜய் அஜித் மாதிரி ஆக நினைச்சேன்… தலையில் தட்டி அனுப்பிட்டாங்க!.. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த கொடுமை…
அவருக்கு தனுஷ் உள்ளிட்ட சிலர் உதவி செய்தனர். விஜய், அஜித் தனக்கு உதவவில்லை என பேட்டியும் கொடுத்தார். மேலும், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து பல லட்சம் செலவு செய்ததாக கூறினார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘விஜயகாந்துடன் பல படங்களில் அவருடன் தனியாக சண்டை போடும் காட்சிகளில் நடித்துள்ளேன். சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது அடிபட்டும், கீழே விழுந்தும் என் உடம்பில் பல பாகங்கள் நொறுங்கிவிட்டது.
இதையும் படிங்க: ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…
அப்போதெல்லாம் என்னை போனில் அழைத்து நலம் விசாரித்து கொண்டே இருப்பார். முதுகு உடைந்து போய்விட்டது. இரண்டு கைகளின் ரிஸ்ட்டும் உடைந்துவிட்டது. முட்டி உடைந்துவிடட்து. தோள்பட்டை உடைந்துவிட்டது. மண்டையில் அடிபட்டு அடிபட்டு பல காயங்கள். எனவே அவரிடம் பேசும்போது ‘சினிமாவுல நடிக்கிறதையே விட்டுடலாம்னு இருக்கேன்’ என அவரிடம் சொன்னேன்.
கோபப்பட்ட விஜயகாந்த் ‘உன்னை மாதிரி நடிக்க இங்க ஆளே இல்லடா. நீ சினிமாவுல தொடர்ந்து நடி.. சண்டை போடனும்னு அவசியம் இல்ல.. ரிஸ்க் எடுக்காம வில்லனா நடி’ என சொன்னார். அதன்பின் சில படங்களில் அவர் சொன்னது மாதிரியே நடித்தேன்’ என பொன்னம்பலம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹோட்டலில் நடந்த தரமான சீன்! குழந்தைனு நினைச்சா? அத விட மோசம் – பல்பு வாங்கிய எஸ்,.ஜே.சூர்யா
