Connect with us
tv

Cinema News

தள்ளாடுற வயசுல துள்ளி ஆட ஆசை! டிவி நடிகையிடம் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் நடிகைகளுக்கு பின்னாடி எத்தனையோ சோக கதைகள் இருக்கின்றன. அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற அந்த ஒரு வார்த்தையை கடக்காமல் வரவே முடியாது. நடிப்பதற்கு முன்பாகவும் நடித்த பின்னரும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற அந்த ஒரு விஷயம் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றன. இது சினிமாவில் மட்டுமில்லாமல் மற்ற எல்லா துறைகளிலும் நடந்து கொண்டு வரும் விஷயமாகவே கருதப்படுகிறது.

இது அறவே ஒழிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்தாலும் ஆசையை அடக்க முடியுமா என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண்களின் ஆசைக்கு ஏற்ப பெண்கள் அவர்களுடைய சூழ்நிலைகளினால் கட்டுப்பட்டு போகத்தான் வேண்டி இருக்கின்றது. இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் ஒரு சில பேர் கூட இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டை கிராஸ் பண்ணி தான் வந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க :எனக்கு பொண்ணு மாதிரி!.. பொணத்தை கூட பார்க்க முடியல.. நடிகை இறப்பால் நொந்துப்போன எஸ்.என் பார்வதி!..

இது ஒரு பக்கம் இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்டையும் தாண்டி சினிமா பிரபலங்கள் தவிர்த்து மற்ற துறைகளில் மிக ஆளுமையாக இருக்கும் சில பேர் கூட தங்களின் ஆசைகளுக்காக டிவி நடிகைகளை குறி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அரசியல் பிரபலங்கள் இதில் மேலோங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் ஆன இதயக்கனி விஜயன் ஒரு சம்பவத்தை கூறினார். அதாவது ஒரு முக்கியமான கட்சியில் தலைவராக இருக்கும் ஒருவர். அவருக்கு வயதும் ஆகிவிட்டதாம். ஒரு நாள் வீட்டில் இருக்கும்போது டிவி பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு டிவி நடிகையை பார்த்து அவர் மனதில் திடீரென்று அந்த ஒரு ஆசை எழுந்ததாம்.

இதையும் படிங்க :சினிமாவே வேண்டாம்!.. பொன்னம்பலம் எடுத்த முடிவு.. களத்தில் இறங்கி காரியம் சாதித்த விஜயகாந்த்…

உடனே அவருக்கு துணையாக இருக்கும் ஒரு மந்திரியை அழைத்து அந்த நடிகையை காட்டி இவளை உடனே அழைத்துக் கொண்டு வா என கூறினாராம். அதற்கு அந்த மந்திரி இந்த வயசான காலத்தில் கூட எதுக்கு தலைவா என கேட்டாராம். அதற்கு அந்த தலைவர் வயதானால் என்ன ?சும்மா அவளை அழைத்துக் கொண்டு வா என கூறினாராம்.

tv1

tv1

இந்த மந்திரி அந்த டிவி நடிகையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை சொல்லி இருக்கிறார். உடனே அந்த டிவி நடிகை அவர் வயசு என்ன என் வயசு என்ன என்னால் வர முடியாது என சொன்னாராம். அதற்கு அந்த மந்திரி இப்போ நீ வரவில்லை என்றால் உன் நிலைமை என்னவாகும் என யோசித்துப் பார் எனக் கூற அதற்கு அந்த நடிகை சமயோகிதமாக யோசித்து ஒரு பல்க்கான தொகையை கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க :ஹோட்டலில் நடந்த தரமான சீன்! குழந்தைனு நினைச்சா? அத விட மோசம் – பல்பு வாங்கிய எஸ்.ஜே.சூர்யா

ஒரு பெரிய தொகையை கேட்டால் விட்டுவிடுவார்கள் என நினைத்து இந்த நடிகை கேட்டிருக்கிறார். உடனே அந்த மந்திரி எங்களிடமே பணம் கேட்கிறாயா என போனை வைத்துவிட்டு அந்த அரசியல் தலைவரிடம் போய் சொல்லி இருக்கிறார். ஆனால் ஆசையில் மிதக்கும் அந்த தலைவரோ பணம்தானே கேட்கிறாள் .கேட்கிற பணத்தை கொடுத்து விட்டு உடனடியாக அவளை அழைத்து வா என சொன்னாராம்.

உடனே அந்த நடிகையிடம் நீ கேட்கிற பணத்தை தருகிறோம் வா என அழைத்தார்கள் வேறு வழி இல்லாமல் இந்த நடிகை அவர்கள் கொடுத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு அந்த அரசியல் தலைவரின் ஆசைக்கு இச்சையாய் இருக்கிறாள். இந்த தகவலை பிரபல திரை விமர்சகர் இதயக்கனி விஜயன் ஒரு பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top