போலீஸ் கொடுத்த வார்னிங்!.. ஒரே மிரட்டலில் உண்மையை உளறிய ரட்சிதா!. இதெல்லாம் தேவையா?!..

Published on: July 4, 2023
rakshita
---Advertisement---

நடிகை ரட்சிதா அவர்கள் பிரபல சீரியல் நடிகரான தினேஷ் அவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகை ரட்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோவின் மூலம் அவருடைய வாழ்க்கையில் நடந்த இன்பங்களையும் துன்பங்களையும் தனது திருமண வாழ்க்கை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அந்த ஷோவில் ரட்சிதா அவருடைய பக்கமே நியாயம் இருப்பதாக மக்களிடம் கூறியிருந்தார். இதனை அடுத்து அவருடைய கணவருக்கு மக்களிடம் நிறைய எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன.

இந்த நிலையில் ரட்சிதா அவர்கள் தற்சமயம் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தினேஷ் அவர்கள் எனக்கு தினமும் ஆபாச குறுஞ்செய்திகளையும் நிறைய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறார். இதன் மூலம் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் கொடுத்துள்ளார். ஆதலால் அவரிடம் இருந்து எனக்கு பூரண விவாகரத்து வேண்டும் மற்றும் அவரை கைது செய்யக்கோரியும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை அடுத்து காவல் ஆணையம் நடிகர் தினேஷ் அவர்களை விசாரித்து வந்தது.

rakshita
rakshita

இந்த நிலையில் நடிகர் தினேஷ் அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று இருந்தார். அதில் ரட்சிதாவை பற்றி நிறைய கேள்விகளும் அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார். என்னுடைய மொபைலை உங்களிடம் கொடுக்கிறேன். இதில் நான் ரட்சிதாவிற்கு ஏதேனும் மெசேஜ் அனுப்பி இருக்கேன்னு நீங்களே செக் பண்ணி பார்த்துக்கோங்க என்று நடுவரிடம் கொடுத்தார்.

இதையும் படிங்க: எல்லா பொண்ணுக்கும் பிடிக்கும் அந்த விஷயம்.. ஆனா அமலாவிற்கு பிடிக்காதாம்!.. காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!..

மேலும் தினேஷ் அவர்கள் கூறியதாவது, ரட்சிதா எனக்கு திடீரென்று ஒரு நாள் நடுராத்திரியில எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தாங்க. அதுல அவங்க எதுக்கு எனக்கு இப்படி மெசேஜ் அனுப்புற இனிமே அனுப்புனா நான் காவல் நிலையத்தில் புகார் செஞ்சிருவேன் அப்படின்னு அனுப்பி இருந்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல திடீர்னு அவங்களா எனக்கு மெசேஜ் பண்ணிட்டு நான் மெசேஜ் அனுப்பின மாதிரி காமிச்சிருந்தாங்க எனக்கு அது புரியவே இல்ல. அனுப்புனதுக்கு அப்புறமா என்னுடைய நம்பரை பிளாக் பண்ணிட்டாங்க.

 

அடுத்த நாள் காலையில என்னோட வீட்டு வாசல்ல போலீஸ் நின்னுச்சு. அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு நைட்டு எனக்கு இதனாலதான் மெசேஜ் அனுப்பி இருக்காங்கன்னு. அதுக்கப்புறம் போலீஸ் என்ன விசாரணை பண்ணினாங்க. நான் எல்லாத்துக்கும் தெளிவான விளக்கம் கொடுத்தேன். மேலும் ரட்சிதாவிடம் இருந்து விவாகரத்து கொடுக்க தயாராகவும் இருக்கிறேன் அப்படின்னு போலீஸிடம் சொன்னேன். இதனை அடுத்து போலீசுக்கு ரட்சிதா மீது சந்தேகம் வந்தது.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்தில் இவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? அப்போ த்ரிஷாவோட நிலைமை?

இதனை அடுத்து போலீஸ் ரட்சிதாவிடம் அவருடைய மொபைலை கேட்டார்கள். அந்த மொபைலில் நான் எந்த ஒரு மெசேஜும் ரட்சிதாவிற்கு அனுப்பவில்லை என்று தெரிஞ்சுக்கிட்டாங்க. இதனை பார்த்த காவலர்கள் ரட்சிதாவை ‘எதற்காக இப்படி பொய் பேசுறீங்க?. இனிமே இப்படி பொய் பேசினா உங்க மீதுதான் வழக்கு போடணும்’ அப்படின்னு சொல்லிட்டாங்க.

rakshita

மேலும் போலீஸ் அவரிடம் ‘ஏன் எதுக்காக இப்படி பண்ணீங்க?’ அப்படின்னு கேட்டாங்க, அதற்கு ரட்சிதா ‘என்னுடைய வக்கீல்தான் இந்த மாதிரி பண்ண சொன்னார்.. அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு இதுதான் வழி அப்படின்னு என்னோட வக்கீல் சொன்னதால நான் இப்படி செஞ்சேன். மன்னிச்சிடுங்க’ என ரக்ஷிதா போலீஸிடம் மன்னிப்பு கேட்டாங்க. இதுல என் மேல எந்த தப்பும் இல்ல அப்படின்னு நடிகர் தினேஷ் அந்த நேர்காணலில் மக்களிடம் நடந்த உண்மையை தெளிவாக கூறியிருந்தார்.

இதனை அடுத்து ரட்சிதாவின் உண்மை முகத்தை அறிந்த அனைவரும் ரட்சிதாவை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகிறார்கள். மேலும் மக்கள் இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவரே கெடுத்துவிட்டார். இந்த செய்தி அனைத்து சமூக வலைதளங்களிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.