Cinema News
நோ பார்ட்டி! நோ ப்யூட்டி – தனுஷின் திடீர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா?
தெருவோரமாக நின்றவர் இன்று கடைக்கோடி தெரு வரைக்கும் அண்ணாந்து பார்க்கக்கூடிய நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் தனுஷ். கோலிவுட் நடிகராக இருந்தவர் இன்று இந்திய திரைப்பட நடிகராகவும் அதையும் தாண்டி உலக அரங்கில் மதிக்கக்கூடிய நடிகராகவும் வளர்ந்து நிற்கிறார். சமீப காலமாக இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.
ஆரம்பத்தில் பட்ட கஷ்டம்
தன்னை இன்னும் மிகச்சிறந்த நடிகராக்க கூடுதல் முயற்சியை எப்போதுமே எடுத்துக் கொண்டே வருகிறார் தனுஷ். சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க எப்பொழுதுமே உழைத்துக் கொண்டே வருகிறார். ஆரம்ப காலங்களில் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே அமைந்தன.
இதையும் படிங்க :ரஜினி கமலேயே வாடா போடான்னு பேசிய கவுண்டமணி!.. இந்த நடிகரை மட்டும் அப்படி பேச மாட்டார்!..
இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள், ரொமான்டிக்கான காட்சிகள் என முகம் சுளிக்க வைக்கும் விதமாக படங்களாக அமைந்தன. ஆனால் தற்போது தனுஷ் நடிப்பில் ஒரு மெச்சூரிட்டி தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த சின்ன வயதில் ரசிகர்களுக்கு உண்டான அறிவுரைகளை அவர் மேடையில் கூறும்போது எந்த அளவுக்கு பக்குவப்பட்டு இருக்கிறார் என்பதையும் பார்க்க முடிகின்றது.
எப்படி மாறினார்?
எப்படி இருந்த தனுஷ் இப்படி மாறிவிட்டாரே என்ற பிரமிக்க வைக்கும் அளவிற்கு தனுஷின் செய்கைகள் கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதற்கு காரணம் அவர் மிகப்பெரிய படிப்பறிவாளியாம். அதாவது எந்நேரமும் புத்தகத்தை படிக்கும் வழக்கத்தை கொண்டவராம் தனுஷ்.
இதையும் படிங்க :இந்நேரம் விமல் நிலைமைதான் எஸ்.கேவுக்கும் ஜஸ்ட்டு மிஸ்.. ப்ளான் போட்டு தப்பித்த சிவகார்த்திகேயன்!..
சென்னையில் வருடம் தோறும் புத்தக திருவிழா நடக்கும் அந்த சமயத்தில் தனது உதவியாளர்களை அனுப்பி கிட்டத்தட்ட 50,000 மதிப்புமிக்க புத்தகங்களை வாங்கி வரச் சொல்லுவாராம். அடுத்த புத்தகப் திருவிழா ஆரம்பிப்பதற்குள் தான் வாங்கிய அத்தனை புத்தகங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளிலே புத்தகத்தை படிக்க தொடங்குவாராம். பெரிய பெரிய இலக்கியவாதிகளின் சிறுகதை, நாவல்கள், புதினம் என ஒன்று விடாமல் அனைத்தையும் படித்து முடித்து விடுவாராம் தனுஷ்.
அதனால் படப்பிடிப்பை தவிர்த்து மற்ற ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்வதை சமீப காலமாக தனுஷ் தவிர்த்து வருகிறாராம்.
இதையும் படிங்க :ஃபிளாப் படம் கொடுத்த பெரிய இயக்குனர்கள்!. தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட 5 படங்கள்..