Cinema News
அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…
தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற கலைஞராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல். திரைத் துறையில் இவர் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக பாடகராக என அனைத்து துறைகளிலும் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரே நடிகர் கமல். சினிமாவைப் பற்றிய இவருடைய அறிவு அளப்பறியாதது.
கமலை போல உண்டா?
அத்தனை நுணுக்கங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார் கமல். வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பயிற்றுனராகவே காணப்படுவார் நடிகர் கமல்ஹாசன். இவரிடம் இருந்து ஏகப்பட்ட விஷயங்களை சினிமா சம்பந்தமாக பெற முடியும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பிற்கு தீனியாக அமைந்தவை கமலின் படங்கள்.
இதையும் படிங்க :என்னத்த பானையை உருட்டினாலும் ஷேப்புக்கு வரமாட்டுங்குது! ஓரங்கட்டப்படுவாரா VP? தளபதி 68ல் என்னதான் பிரச்சினை?
எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை வகையான உணர்ச்சிகள். ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட முயற்சியை தெள்ளத் தெளிவாக காட்டியிருப்பார் கமல். அந்த வகையில் கமலை பற்றி முன்பு ஒரு மேடையில் பாரதிராஜா சொன்னது இன்று வைரலாகி வருகின்றது. கமலை வைத்து பாரதிராஜா சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தை எடுத்திருந்தார்.
நடிக்க மாட்டேன் என சொன்ன நடிகர்கள்
ஆனால் கமலுக்கு முன்பாக இரு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை பாரதிராஜா சொல்ல அது முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம் என்பதால் அந்த நடிகர்கள் நடிக்க மாட்டேன் என்று போய்விட்டார்களாம். அதன் பிறகு தான் கமல் இந்த படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க :தண்ணியடிக்க வேண்டியது!. அப்புறம் கற்பு போச்சுன்னு அழ வேண்டியது- 2கே பெண்களை விளாசும் ரேகா நாயர்!..
அந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நிகழ்த்திய ஒரு அதிசயத்தை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார் பாரதிராஜா. அதாவது கடைசி காட்சியில் கமலின் கண்ணை குளோசப்பில் வைத்திருப்பார் பாரதிராஜா. நான் எப்பொழுது அழு என்று சொல்கிறேனோ அந்த வினாடியில் உன் கண்ணில் இருந்து நீர் துளி வர வேண்டும் என்று சொல்லிவிட்டாராம்.
கேமரா கமல் கண்ணை நோக்கி போக போக சரியான குளோசப்பில் வந்ததும் லெட்ஸ் டியர்ஸ் என்று சொன்னவுடனே அவர் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வந்து விழுந்ததாம். இப்படி ஒரு நடிகனை நான் பார்த்ததே இல்லை என மெய்சிலிர்க்க கூறினார் பாரதிராஜா.
இதையும் படிங்க :அடுத்த இசை வாரிசுனு இளையராஜா சொன்னது சரிதான்! கார்த்திக்ராஜா இசையில் இவ்ளோ சூப்பரான பாடல்களா?