Cinema History
போற போக்குல வாய்ப்பு கிடைக்கும் போல..கல்யாணத்துக்கு வந்த பொண்ணுக்கு எம்.ஜி.ஆர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!..
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சினிமாவில் இசை, இயக்கம், நடிப்பு என எதில் வாய்ப்பை பெற வேண்டும் என்றாலும் அதற்காக கடுமையாக போராட வேண்டி இருக்கும். இப்போதாவது சமூக வலைத்தளம் போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் நம்மை பிரபலப்படுத்திவிடுகின்றன.
எனவே அதை வைத்தே சினிமாவில் வாய்ப்பை பெற முடிகிறது. ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் சினிமாவில் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது சென்னைக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து காணாமல் போனவர்கள் பலர்.
இதையும் படிங்க:என்ன நட்டுக்கிட்டு நிக்குமா?..தொகுப்பாளரிடம் கலாய் வாங்கிய இயக்குனர்!. இது என்னடா சின்ன தலக்கி வந்த கொடுமை..
ஆனால் கேரளாவில் இருந்து ஒரு திருமணத்திற்கு வந்து எளிதாக கதாநாயகி ஆகியுள்ளார் நடிகை செம்மீன் ஷீலா. சந்திரமுகி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
வாய்ப்பை பெற்ற நடிகை:
கேரளாவை சேர்ந்த செம்மீன் ஷீலா ஒரு திருமணத்திற்காக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த சமயத்தில் பக்கத்தில் நாடகம் ஒன்று நடந்துள்ளது. இவருக்கு நாடகம் மீது விருப்பம் இருந்ததால் அங்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் நாடகத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க:பிக்பாஸுக்கு போனால் இந்த நிலைமைதான்! ராஜு இப்போ என்ன பண்ணிட்டுகிட்டு இருக்காருனு தெரியுமா?
அவரிடம் சென்ற ஷீலா எனக்கும் நாடகத்தில் வாய்ப்பு வாங்கி தாருங்கள் என கேட்டுள்ளார். இது வாய்ப்பு கேட்கும் இடமல்ல சென்னையில் என் அலுவலகத்தில் வந்து கேளுங்கள் என கூறியுள்ளார் எஸ்.எஸ்.ஆர். உடனே சென்னைக்கு வந்துள்ளார் ஷீலா.
பிடிவாதமாக இருக்கிறாரே என ஒரு நாடகத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எஸ்.எஸ்.ஆர். ஆனால் அந்த நாடகத்திலேயே இவர் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குனர் டி.ஆர் ராமன்னா அவரது நடிப்பை கண்டு சினிமாவில் சேர்த்து கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பாசம் என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் காதலியாக நடித்தார் ஷீலா. இப்படி மிக எளிதாகவே சினிமாவில் வாய்ப்பை பெற்றுள்ளார் ஷீலா.
இதையும் படிங்க:ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..