துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனுஷ் அதன்பின் தொடர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். ஒருபக்கம் பக்கா கமர்சியல் மசாலா படங்களிலும் ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கும், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்திய திரையுலகில் தனுஷ் என்றால் தெரியுமளவுக்கு முன்னேறியுள்ளார். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை உடையவர் இவர்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் ரஜினி மாதிரி பிடிவாதம் பிடிக்கவே முடியாது..!ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர்..!
இப்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு தனது 50வது படத்தையும் துவங்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் தொடார்பான அறிவிப்பையும் தனுஷ் நேற்று வெளியிட்டுள்ளார். இப்படம் முழுவதும் மொட்டை தலை கெட்டப்புடன்தான் தனுஷ் நடிக்கவுள்ளார்.

மேலும், அபர்ணா பாலமுரளி, துஷரா விஜயன், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராமன், எஸ்.ஜே. சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. பவர்பாண்டி படத்திற்கு பின் தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த காமெடி தெரியும்.. ஆனா படம் தெரியாது!.. வடிவேலுவின் ஹிட்டு காமெடியில் வெளிவந்த 5 ஃப்ளாப் படங்கள்!..
