என் புருஷன் சாவ கிடக்குறாரு.. எங்க பணத்தை கொடுத்துடு!.. கதறும் நயன்தாராவின் அத்தை…

Published on: July 7, 2023
---Advertisement---

போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா என்றாலே எல்லாமே சர்ச்சைதான். திருமணம் முதல் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது முதல் எல்லாமே சர்ச்சையாகவே இருக்கிறது.

Nayanthara and Vignesh Shivan
Nayanthara and Vignesh Shivan

இப்போது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டபோதே விக்னேஷ் சிவனின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது அவர்கள் மீது அவர்களே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது மோசடி புகாரை கொடுத்துள்ளனர்.

நயன்தாராவின் அத்தை அதாவது விக்னேஷ் சிவனின் சித்தி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூர்வீக சொத்தை விக்னேஷ் சிவனின் அப்பாவும், அவரின் குடும்பத்தினரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டனர் எனவும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவேண்டும் எனவும் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nayan
nayan

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் விக்னேஷ் சிவனின் அப்பா சிவகொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் 9 பேர். இவர்களின் பூர்வீக சொத்தை யாருக்கும் தெரியாமலேயே சிவகொழுந்து விற்பனை செய்துவிட்டார். இது தொடர்பான உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சொத்தில் எல்லோருக்கும் பங்கு இருப்பதால் எல்லோரும் பிரிந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு வந்தது. ஆனால், விக்னேஷ் சிவனின் அப்பா அதை கடைபிடிக்கவில்லை.

இதையும் படிங்க: கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…

இந்த நிலையில்தான் சிவகொழுந்துவின் தம்பி அதாவது விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம் மற்றும் பெரியப்பா மாணிக்கம் ஆகியோர் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், விக்னேஷ் சிவன் மற்றும் அவரின் அப்பா, அம்மா, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தங்கை ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

nayan
nayan

இதுஒருபுறம் இருக்க, குஞ்சிதபாதத்திற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.5 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், அந்த பணம் கூட தங்களிடம் இல்லை என அவரின் மனைவி அதாவது விக்னேஷ் சிவனின் சித்தி கதறி அழுதும் வீடியோ வெளியாகியுள்ளது. ‘இட்லி கடை வைத்துதான் பொழப்பை நடத்தி வருகிறோம். விக்னேஷ் சிவன் எங்களுக்கு பிச்சை போட வேண்டாம். எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்தால் போதும் என் புருஷனை நான் காப்பாற்றிவிடுவேன்’ என அவர் கதறி அழுவது எல்லோரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்த புகாருக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: எவ்ளோ நாள் ஆச்சு? சிம்புவை அப்படி பார்த்து – தேசிங்கு பெரியசாமி வைத்த ட்விஸ்ட்! செட் ஆகுமா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.