விஜய் வரவே மாட்டேனு சொல்லிட்டாரு! வடிவேலு பட இசைவெளியீட்டு விழாவில் நடந்த களேபரம்

Published on: July 9, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இப்போது அரசியலிலும் தன்னுடைய முயற்சிக்கான படிக்கல்லை எடுத்து வைத்திருக்கிறார் விஜய். அடுத்து என்ன செய்யப் போகிறார் விஜய் என்றளவுக்கு ரசிகர்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் விஜயை பற்றி சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறியிருக்கிறார். மாணிக்கம் நாராயணன் இதுவரை ஒருவரை பற்றி நல்ல விதமாக சொல்லியிருக்கிறார் என்றால் அது விஜயை பற்றி மட்டும் தான். அஜித், மணிரத்தினம், மகிழ் திருமேனி, கார்த்திக், ரம்பா என திரையுலகை சார்ந்த அத்தனை பேரையும் ஒரு வாரு வாரி வாங்கிவிட்டார் மாணிக்கம் நாராயணன்.

vijay1
vijay1

அதாவது மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் வடிவேலு நடித்த படம் தான் இந்திர லோகத்த்தில்  நா அழகப்பன் . இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜயை அழைத்திருக்கிறார் மாணிக்கம். முதலில் வருகிறேன் என்று சொல்லிவிட அதை வைத்து நடிகர் சூர்யாவையும் விழாவிற்கு அழைத்தாராம் மாணிக்கம். அதன் பின் மாணிக்கத்திற்கு விஜய் போன் செய்து என்னால் வரமுடியாது , வேறொரு வேலை இருக்கிறது என சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க : ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப் போகுதுனு தெரியுமா? அட இத யோசிக்கவே இல்லையே?

இதை கேட்டதும் மாணிக்கத்திற்கு ஒரே வருத்தமாக போய்விட்டதாம். உடனே நேராக விஜய் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பிற்கே போய்விட்டாராம். அங்கு போய் தயவு செய்து வாருங்கள், உங்களை நம்பித்தான் சூர்யாவையும் அழைத்திருக்கிறேன் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால் விஜய் அவரை விட மிகவும் கெஞ்சி என்னால் வரவே முடியாது என சொல்லிவிட்டாராம்.

vijay2
vijay2

அதன் பின் இதை சூர்யாவிடம் தெரிவிக்க சூர்யாவோ யார் வந்தாலும் சரி வரவில்லையென்றாலும் சரி கண்டிப்பாக நான் வருகிறேன் என சொல்லிவிட்டாராம். உடனே விஜய்க்கு பதிலாக சிம்புவை மாற்றி அவரை விழாவிற்கு வரவழைத்திருக்கிறார். விழாவில் மேடையில் மாணிக்கம் நாராயணன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரே சலசலப்பு ஏற்பட்டதாம். பார்த்தால் விஜய் வந்துவிட்டாராம். அதை பார்த்ததும் மாணிக்கம் நாராயணன் தேம்பி தேம்பி அழுது விட்டாராம்.

இதையும் படிங்க : கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..

அதை பார்த்ததும் மேடைக்கு ஓடிவந்தாராம் விஜய். வந்து மாணிக்கம் நாராயணனை கட்டிபிடித்து ஏன் இவ்ளோ இமோஷனல் ஆகுறீங்க? நான் தான் வந்து விட்டேன்ல என சொன்னாராம். இதை குறிப்பிட்டு பேசிய மாணிக்கம் நாராயணன் விஜயின் அம்மா ஷோபா விஜயை எவ்வளவு அருமையாக வளர்த்திருக்கிறார் தெரியுமா என கூறினார்.

vijay3
vijay3

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.