Connect with us

Cinema News

நான் செஞ்ச வேலையால் அண்ணாவும், அப்பாவும் வீட்டை விட்டே போயிட்டாங்க!.. நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..

தமிழ் சினிமாவில் அனைத்து கதாநாயகிகளாலும் வெகுநாட்கள் சினிமாவில் இருக்க முடிவதில்லை. ஏனெனில் கதாநாயகர்கள் அளவிற்கு கதாநாயகிகளுக்கு ரசிகர்கள் இருப்பதில்லை. இதனாலேயே கதாநாயகிகள் சீக்கிரமாகவே வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.

இதையும் படிங்க:அஞ்சலியின் மயக்கத்தில் ஆட்டம் போட்ட ஹீரோ!..படாத பாடு படுத்திய அந்த நடிகர்!..

அப்படி சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலமாக இருந்த கதாநாயகிகளில் நடிகை நளினி முக்கியமானவர். நளினி டி.ஆர் இயக்கிய உயிருள்ளவரை உஷா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நளினி.

nalini

nalini

அதன் பிறகு விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நளினி. சினிமாவில் பெரும் நடிகையான நளினி நடிகர் ராமராஜனை திருமணம் செய்துக்கொண்டார். சில நாட்களில் சினிமாவில் வாய்ப்பை இழந்த நளினி பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க:அங்க மட்டும் மூட மாட்டேன்!.. ஓப்பனா காட்டி இளசுகளை மயக்கும் மிருனள் தாக்கூர்..

நளினிக்கு வந்த பிரச்சனை:

இவ்வளவு வருடங்கள் சினிமாவில் இருந்தாலும் கூட ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகளை பெற வெகுவாக கஷ்டப்பட்டார் நளினி. முக்கியமாக அவரது குடும்பத்தாருக்கே அவர் சினிமாவிற்கு செல்வது பிடிக்கவில்லை.

எனவே நளினி சினிமாவிற்கு செல்ல இருப்பதை அறிந்த அவரது அப்பாவும், அண்ணனும் வீட்டை விட்டே சென்றனர். இருந்தாலும் நளினியின் அம்மா நளினிக்கு மிக ஆதரவாக இருந்தார். என்ன ஆனாலும் நளினியை கதாநாயகி ஆக்கிவிட வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். இந்த விஷயத்தை நளினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அரவிந்த்சாமிக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகை! அண்ணன் மவுசு தெரிஞ்சும் யாருப்பா அந்த நடிகை?

 

Continue Reading

More in Cinema News

To Top