Cinema History
எம்.ஜி.ஆர் தோட்டத்தில் எலும்புக்கூடுகள் வந்தது எப்படி?.. திக் திக் பின்னணி இதுதான்!..
சினிமாவில் வளர்ச்சி:
நாடகங்களில் நடித்து பின்னர் நடிகரானவர் எம்.ஜி.ஆர் 50,60,70 களில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் ஆளுமையாக இருந்தவர். ஒருகட்டத்தில் அரசியல் கட்சியையும் துவங்கி நாட்டின் முதல்வராகவும் இருந்துள்ளார்.
இவருக்கு நிறைய எதிரிகள் உண்டு. சினிமாவில் நடிக்கும்போது இவரை பற்றி பத்திரிக்கைகளில் அவதூறாகவும், அசிங்கமாகவும் எழுதிய பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். திரைத்துறையிலும் இவரை பிடிக்காதவர்கள் இவருக்கு எதிராக பல சதிகளை செய்துள்ளனர். ஆனால், எல்லாவற்றையும் சமாளித்துதான் எம்.ஜி.ஆர் அந்த இடத்தை பிடித்தார்.
இராமபுரம் தோட்டம்:
எம்.ஜி.ஆர் வசித்து வந்த ராமாபுரம் தோட்டத்தை அவர் லேனா செட்டியார் என்பவரிடமிருந்து வாங்கினார். லேனா செட்டியார் ஒரு தயாரிப்பாளர். தேசிங்கு ராஜா, மதுரை வீரன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார். எம்.ஜி.ஆர் வாங்கிய அந்த இடம் பல வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவர்களின் கல்லறையாக இருந்தது. எனவே, அந்த இடத்தை பயன்படுத்தக்கூடாது என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்தில் தீர்ப்பு எம்.ஜி.ஆருக்கு சாதகமாக வந்தது.
இதையும் படிங்க: தெருவில் நின்ற சைக்கிளை எடுத்து சென்ற எம்.ஜி.ஆர்.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்…
அதன்பின் அங்கே கட்டிடம் கட்ட நிலத்தை தோண்டிய போது உள்ளே இருந்து எலும்புக்கூடுகள் வந்தது. இதுதான் சந்தர்ப்பம் என காத்திருந்த எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகள் எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் எலும்புக்கூடுகள் என செய்திகளை பரப்பியதோடு, இதை வைத்து மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே இந்த இடம் கல்லறையாக இருந்ததால் எலும்புக்கூடுகள் வந்ததில் ஆச்சர்யம் இல்லை எனக்கூறி அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்கு மேல் எம்.ஜி.ஆரின் எதிரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதையும் படிங்க: கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…