இளையராஜா எண்ட்ரி:
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் கிராமத்து மண்வாசனை மிக்க பாடல்களை கொடுத்து புயலாக வந்தவர் இளையராஜா. வாய்ப்பு கிடைத்த முதல் படமான அன்னக்கிளி-யில் கிராமத்து இசையை கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

அதன்பின் பல படங்களுக்கும் இசையமைத்து ஒருகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராகவும் மாறினார். 1976ம் வருடம் சினிமாவில் இசையமைப்பாளராகி பல வருடங்கள் இசை ராஜாவாக இருந்தார். 90 சதவீத பாடங்களுக்கு இளையராஜாதான் இசை. இவரின் இசையை நம்பியே பல படங்கள் உருவானது. பல திரைப்படங்களை தனது பாடல்களால் ஓட வைத்தார். இப்போதும் இவரின் இசைதான் பலருக்கும் ஃபேவரைட்.
இதையும் படிங்க: முதல் படத்தையே முடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இயக்குனர்!.. கை கொடுத்த இளையராஜா!.. என்ன மனுசன்யா!.
80களில் கலக்கிய ராஜா:
ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு,சத்தியராஜ், ராமராஜன் என 90களில் கலக்கிய அத்தனை நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசை. அதேநேரம், கடந்த சில வருடங்களாகவே தனது பேச்சால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவர் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகவும் மாறிவிடுகிறது. இளையராஜா இசையை எவ்வளவு நேரம் வேண்டுமானால் கேட்கலாம்.. ஆனால், அவர் பேசினால் கேட்கவே முடியாது என நெட்டிசன்கள் கிண்டலடிக்க துவங்கிவிட்டனர். அவர் இப்போது அல்ல.. எப்போதும் எதையும் யோசிக்காமல்தான் பேசுவார்.

விஜயகாந்த் திருமணம்:
நடிகர் விஜயகாந்தின் திருமண விழாவில் கலந்து கொண்ட இளையராஜா ‘எடுத்து வச்ச பாலும் விரிச்ச வச்ச பாயும் வீணாகத்தான் போகுது’ என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பாடாதவாறு அவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என பேசியிருந்தார். இந்த பாடல் விஜயகாந்த் – ராதா நடித்து வெளியான ‘நினைவே ஒரு சங்கீதம்’ படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
எனவே, அதை வைத்தே விஜயகாந்தின் திருமண விழாவில் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என நினைத்து கொஞ்சம் தூக்கலாகவே அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் படத்தையே முடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இயக்குனர்!.. கை கொடுத்த இளையராஜா!.. என்ன மனுசன்யா!.
