Connect with us
cherain

Cinema History

ராமராஜனை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது!. பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சேரன்…

கே.எஸ்.ரவிக்குமாரிடம் சில படங்கள் உதவியாளராக பணிபுரிந்து விட்டு ‘பாரதி கண்ணம்மா’ என்கிற திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் சேரன். சமுதயாயத்தில் நடக்கும் தவறுகளை, சாதி ஏற்றத்தாழ்வுகளை, மக்களின் அறியாமையை, அரசியல்வாதிகளின் நடத்தைகளை தனது திரைப்படங்களில் கோபத்துடன் பதிவு செய்தவர். மிகவும் உணர்ச்சிவசப்படும் குணாதிசியம் கொண்டவர்.

ஆட்டோகிராப் படம் மூலம் இளைஞர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த காதல் அனுபவங்களை அழகாக பதிவு செய்தவர். 60,70களில் இருந்த கடிதம் மூலம் காதல் அனுபவங்களை பொக்கிஷம் படம் மூலம் பதிவு செய்தவர். சொல்ல மறந்த கதை திரைப்படம் மூலம் நடிகராகவும் மாறினார்.

அதன்பின் ஆட்டோகிராப், பொக்கிஷம், மாயக்கண்ணாடி, ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, யுத்தம், செய், முரண், சென்னையில் ஒரு நாள், ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு நடிகராக வேண்டும் என்கிற ஆசைதான் இருந்தது. நடிகர் ராமராஜன் எங்கள் ஊர் மேலூரில் இருந்த கணேஷ் தியேட்டரில் வேலை செய்தவர். அதன்பின் சென்னை வந்து உதவி இயக்குனராக இருந்து அதன்பின் நடிகராகி விட்டார். அவர்தான் எனக்கு ரோல் மாடலாக இருந்தார். அவரால் முடிகிறது எனில் நம்மாலும் முடியும் என நினைத்து சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால், நடிக்க வாய்ப்பு கேட்டு பெரு பெருங்கூட்டமே இங்கே காத்திருக்கிறது என்பது எனக்கு பிறகுதான் தெரிந்தது.

ramarajan

என்னை விட உயரமாகவும்,அழகாகவும், கட்டுமஸ்தான உடம்பை வைத்துக்கொண்டும் எனக்கு முன்பு பல ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களின் அருகே கூட என்னால் நிற்கமுடியவில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் கூட்டத்தில் ஒருவராகத்தான் நிற்க வைப்பார்கள் என்பதை புரிந்துகொண்டேன். எனவே, இந்த ரூட்டில் நடிகராக முடியாது என்பதை புரிந்துகொண்டேன். அப்போது பாக்கியராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பாக்கியராஜ், பாலச்சந்தர் போன்ற சில இயக்குனர்கள் ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தனர். எனவே, இயக்குனராகி விட்டு பின் நடிகராவோம் என கணக்குப்போட்டு கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். நான் நினைத்தது மாதிரியே பின்னாளில் நடிகராகவும் மாறினேன்’ என சேரன் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்….

google news
Continue Reading

More in Cinema History

To Top