பாத்ரூம் போன இடத்துல சில்க் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல – பட்ட கஷ்டத்தை பகிர்ந்த ஷகீலா

Published on: July 12, 2023
silk
---Advertisement---

தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன்னுடைய கவர்ச்சியால் கட்டி போட்டு வைத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகைகளையும் தாண்டி இவருக்கு இருந்த மவுசு மற்ற நடிகர்களை பொறாமை பட வைத்தது. ஒரு படத்தில் நடிப்பதற்கு கதாநாயகிகள் கால்ஷீட் தருகிறார்களோ இல்லையோ பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் முதலில் சில்கின் கால்ஷீட் தான் வாங்குவார்கள்.

அந்த அளவுக்கு கொடிகட்டி பறந்தார் சில்க். குழந்தைத்தனமான பேச்சு, அழகிய கண்கள் ஆடைகளில் வித்தியாசமாக அணிவது என அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர் சில்க். அன்றைய முன்னணி நடிகைகளுக்கு பிடித்தமான நடிகையாக இருந்தவரும் சில்க் தான். இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் தெரியாமல் எத்தனையோ பேருக்கு உதவியும் செய்து இருக்கிறார்.

silk1
silk1

இதையும் படிங்க : எலே நான் என்ன பன்னியா?!. பன்னி கடிச்சா என்னாகும்னு தெரியாமல!.. புளுசட்ட மாறனிடம் பாய்ந்த ஜிபி முத்து…

தன்னுடைய உதவியாளர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் மனம் கொண்டவர் சில்க். இவருடைய கவர்ச்சி நடனத்தை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து திரையரங்கை அல்லல் பட வைப்பார்கள். கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ இவரின் நடனத்தை பார்ப்பதற்காகவே ஒட்டுமொத்த கூட்டமும் வந்து நிற்கும்.

அந்த அளவுக்கு சில்க் ஸ்மிதா ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவராக மாறினார். ஆனால் அவருடைய மரணம் தான் இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது. அதுவும் அவருடன் நடித்த சக நடிகர்கள் நடிகைகள் இன்றுவரை சில்க்கைபற்றி பேசும் போது முதல் நாள் இரவு கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். மறுநாள் செய்தித்தாள்களில் அவள் இறந்ததை பற்றிய செய்தியை தான் பார்க்க முடிந்தது என கூறி இருக்கிறார்கள்.

silk2
silk2

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான ஷகிலா சில்க்கை பற்றி ஒரு அனுபவத்தை பேட்டியின் மூலம் தெரிவித்து இருக்கிறார். ஷகிலா 15 வயதாக இருக்கும் போது அவர் நடித்த முதல் படத்தில் சில்க்கிற்கு தங்கையாக நடித்தாராம். முதல் நாள் படப்பிடிப்பிற்கு சில்க் வரவில்லையாம். இரண்டாம் நாள் படப்பிடிப்பிற்கு தான் சில்க் வந்தாராம். அப்போது சில்க் மிகவும் அந்தஸ்தை பெற்ற நடிகையாக தான் இருந்தாராம்.

இதையும் படிங்க : ராமராஜனை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது!. பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சேரன்…

ஷகிலாவிற்கு ஒரு ஸ்விம்மிங் ஃபுல் உடை மாதிரியான டிரெஸ்ஸை கொடுத்திருந்தார்களாம். அதை அணிந்து கொண்டிருக்க பாத்ரூம் போவதற்காக இடத்தை தேடி இருக்கிறார். பாத்ரூம் போக வேண்டும் என்றால் முழு ஆடையையும் கழட்டி விட்டு தான் போக வேண்டுமாம். அதனால் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி தேடி இருக்கிறார் ஷகீலா.

silk3
silk3

அவர் தங்கியிருந்த அறைக்கு மேல் தான் சில்க் அறை இருந்ததாம். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என ஷகிலா சில்க் ரூமுக்கு சென்றாராம். ஆனால் இங்கு எல்லாம் வரக்கூடாது என சில்க்கும் அவருடைய உதவியாளர்களும் அவரை வெளியே துரத்தி விட்டார்களாம். இந்த ஒரு சம்பவத்தால் ஷகிலா “தயவு செய்து சில்க் மாதிரி மட்டும் வரவே கூடாது” என யோசித்தாராம். அவர் தன்னிடம் காட்டிய ஆட்டிடியூடை வேறு யாரிடமும் நாம் காட்டவே கூடாது என அன்றே யோசித்தாராம். அதிலிருந்து இன்று வரை ஷகிலா அவருடைய உதவியாளர்கள் யாராக இருந்தாலும் தனக்கு சமமாக தான் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.