எலே நான் என்ன பன்னியா?!. பன்னி கடிச்சா என்னாகும்னு தெரியாமல!.. புளுசட்ட மாறனிடம் பாய்ந்த ஜிபி முத்து…

Published on: July 12, 2023
gp muthu
---Advertisement---

டிக்டாக் ஆப் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் அந்த ஊர் வட்டார வழக்கு மொழி பேசி வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்தார். பொழுதுபோக்குக்காக டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்டு ஒரு கட்டத்தில் பிரபலமாகவும் மாறினார். ரவுடி பேசி சூர்யா உள்ளிட்ட சிலருடன் சண்டை போட்டு அதையும் கண்டெண்ட் ஆக்கினார்.

டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டபின் இன்ஸ்டாகிராம், யுடியுப் ஆகியவற்றில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எல்லோரும் இவரை அண்ணாச்சி, தலைவரே என அழைக்கிறார்கள். பலர் இவரை ட்ரோல் செய்தும் வீடியோவை வெளியிடுகின்றனர். எலே செத்தப்பயலே.. நாரப்பயலே.. பன்னிப்பயலே என இவர் பேசும் வசனங்கள் நெட்டிசன்களிடம் மிகவும் பிரபலம்.

GP Muthu and letters

ஒருகட்டத்தில் இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்தார். தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பம்பர் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. இதில், 8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் வெற்றி, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்….

இந்த படம் பற்றி விமர்சனம் செய்த புளூசட்ட மாறன் வழக்கத்திற்கு மாறாக இப்படம் நன்றாக இருக்கிறது எனக்கூறிவிட்டு, படத்தின் இடையே ஒரு பன்றி வருகிறது.. அதை அடித்து கொன்றிருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும் என சொன்னார். இப்படத்தில் ஜிபி முத்து நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார்.

pumber

எனவே, அவரைத்தான் மாறன் பன்னி என சொன்னதாக பலரும் கூறினார். இதைதொடர்ந்து வீடியோ வெளியிட்ட ஜிபி முத்து ‘பம்பர் படம் பற்றி புளூசட்டமாறன் வீடியோ போட்டிருக்கார். அதில், பன்னி என என்னை திட்டியுள்ளார். ஏய் நான் என்ன பன்னியா?.. எலே பன்னி என்ன செய்யும் தெரியுமா?.. பன்னி ரொம்ப டேஞ்சர். கடிச்சா கொத்தா புடிங்கிட்டு போயிடும்.. பன்னிக்கிட்ட வாலாட்ட கூடாது.. பன்னி கடிச்சி குதறிவிடும். எனவே, அது போகும்போது அமைதியாக இருக்க வேண்டும்’ என புளூசட்ட மாறனை கோபமாக திட்டியுள்ளார்.

புளூசட்ட மாறனுக்கும், ஜிபி முத்துவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நெட்டிசன்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராமராஜனை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது!. பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சேரன்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.