Cinema History
மக்களின் குரலில் உருவான எம்.ஜி.ஆரின் பாடல்.. அது என்ன தெரியுமா..?
எக்காலத்துக்கும் தமிழ் சினிமா போற்றும் சிறந்த நடிகராய் மட்டுமில்லாமல் மக்களின் தலைவனாய் தடம் பதித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாடகக் கலைஞராக தன்னை வாளர்த்தி கொண்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டார். இதனால் அரசியலிலும் கோலோச்சி மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக விளங்கினார்.
ஆயிரத்தில் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இதை பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கியிருப்பார். இப்படத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா , எம்.என்.நம்பியார் , மனோகர் , நாகேஷ் , எஸ்.வி.ராமதாஸ் , விஜயலட்சுமி மற்றும் மாதவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருப்பர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடற்கொள்ளையர்களை மையப்படுத்தி அமைந்திருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று கொண்டிருந்தது. அடிமைகளாக எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் அங்கு இருக்கும் காட்டில் மரம் வெட்டுவது போல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அப்பொழுது உடன் இருந்தவர்கள் ”ஏன்” என்ற வார்த்தையை பயன்படுத்தி அதிக கேள்விகளை எழுப்புவார்கள். அப்பொழுது அவற்றுக்கு சரியான பதிலும் எம்.ஜி.ஆர் கொடுப்பார்.
அப்பொழுது அந்த காட்சியில் ஏன் என்று கேட்பது போல் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். உடனே கவிஞர் வாலியிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் வாலியும் பாடல் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் குரலில் பாடலை ஒலிப்பதிவு செய்தனர். பின்னர் இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு அனுப்பப்பட்டது.
இதைக் கேட்ட எம்.ஜி.ஆர் மிகவும் திருப்தி அடைந்தார். உடனே அந்தப் பாடலை படத்தில் இணைக்கும்படி இயக்குனர் பந்தலுவிடம் சொன்னார். அப்படி இடம்பெற்ற பாடல் தான் ”ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..”
அப்பொழுது இந்த பாடலின் காட்சி கர்நாடகா பகுதியில் படமாக்கப்பட்டிருக்கும் பொழுது சுற்றி இருந்த தமிழர்கள் எம்.ஜி.ஆர் காண குவிந்தனர். அவர்களை கண்ட எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியுடன் அனைவருடனும் போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் வந்த அனைவருக்கும் தலா 200 ரூபாய் பரிசாக அளித்து மேலும் அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார்.