Cinema News
போதும்டா சாமி!. ஹிட் படத்தின் 2ம் பாகமாக வெளிவந்து ரசிகர்களை சோதித்த படங்கள்.. பெரிய லிஸ்டே இருக்கு!…
ஒரு படம் நன்றாக ஓடி, நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால் போதும், உடனே அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. ஹாலிவுட்டில் பல பாகம் எடுக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது தான். ஆனால் தமிழ் சினிமாவில் பார்ட் 2 என்றாலே ரசிகர்கள் தெறித்து ஓடுகின்றனர். ஏனென்றால் செம ஹிட்டான பல தமிழ் படங்களில் இரண்டாம் பாகங்கள் மிக மொக்கையாக இருப்பதுதான்.
தமிழில் பெரும்பாலான பார்ட் 2க்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றே கூறலாம். பல படங்களின் இரண்டாம் பாகம் வெளியானதே மக்களுக்கு தெரியாத அளவில் தான் உள்ளது. அடுத்தடுத்து சந்திரமுகி 2, இந்தியன் 2 என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த பதிவில் படுதோல்வி அடைந்த பார்ட் 2 படங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
மாரி 2
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படம், மாரி படம் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ரவுடி பேபி பாடல் ஹிட் ஆக வில்லை என்றால் இந்த படம் வந்ததே பலருக்கு தெரியாது.
சாமி 2
சாமி படம் 2003ம் ஆண்டு வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்தது. 18 வருடங்களுக்கு பிறகு ஹரி இயக்கத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான சாமி 2 படம் ஆள விடுங்கடா சாமி என்று கூறும் வகையில் இருந்தது. இதனால் இந்த படம் படு தோல்வி அடைந்தது.
பில்லா 2
ரஜினிகார்ந்த் நடித்த பில்லா படத்தின் மார்ட்ன் ரீமேக் தான் பில்லா திரைப்படம். விஷ்ணுவர்தன் இயக்கிய இந்த படத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2021ம் ஆண்டு பில்லா 2 படம் வெளியானது. இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தோல்வி அடைந்துவிட்டது.
சண்டகோழி 2
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சண்டகோழி திரைப்படம் நன்றாக ஓடியது. இதனையடுத்து 2018ம் ஆண்டு சண்டகோழி 2 படத்தை லிங்குசாமி இயிக்கியிருந்தார். இந்த படத்தில் விஷால், கீர்த்தி சுரோஷ் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்த படமும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.
கலகலப்பு 2
சிவா, விமல் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படம் தரமான காமெடி படமாக இருந்தது. அதனால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்போடு கலகலப்பு இரண்டாம் பாகத்திற்கு சென்ற ரசிகர்கள் கதறி அழுகாத குறையாக வெளியே வந்துவிட்டனர். இந்த படத்தில் காமெடியும் இல்லை, லாஜிக்கும் இல்லை என்று விமர்த்திருந்தனர்.
இது மட்டுமில்லாமல் கோ2, பீட்சா 2, நீயா2, வேலையில்லா பட்டதாரி 2, சமீபத்தில் வெளியான தலைநகரம் 2 என பல பார்ட் 2க்கள் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தான் பார்ட் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது.