நடிகையுடன் நெருக்கமாக நடிச்சதால் எனக்கு ஆப்படிச்சார் கவுண்டமணி!.. பல வருட பகையை சொன்ன பயில்வான் ரங்கநாதன்..

Published on: July 14, 2023
goundamani
---Advertisement---

தமிழ் சினிமாவில் 1970-களில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கவுண்டமணி. பல திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி காதாநாயகனாக மாறியவர். சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து கொண்டிருந்தார். அப்போதே இவருக்கு செந்திலுடன் பழக்கம் உண்டு. அதன்பின் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகள் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

சில திரைப்படங்கள் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளுக்காகவே ஓடியது. ஒரு கட்டத்தில் ஹீரோக்களின் நண்பனாக நடிக்க துவங்கினார். கார்த்திக், சரத்குமார், சத்தியராஜ் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் போல் பல படங்களில் நடித்துள்ளார்.

goundamani1
goundamani1

கவுண்டமணி கோபக்காரரும் கூட. அவருக்கு பிடிக்காதது போல் ஒரு நடிகர் நடந்துகொண்டால் அவர்களை பழி வாங்கிவிடுவார். சின்ன சின்ன காமெடி நடிகர்கள் கவுண்டமணியை நம்பியே இருந்தனர். அதில் யார் மீதேனும் கோபம் இருந்தால் வாய்ப்பு தர மாட்டார். அவர்களுக்கு வரும் வாய்ப்புகளையும் கெடுத்துவிடுவார். அவருடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகை ஷர்மிலி கூட சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘கவுண்டமணி காமெடி வேடத்தில் என்னை நடிக்க வைத்து என் கேரியரை கெடுத்தார். அவருடன் நடிக்க மறுத்ததால் எனக்கு வந்த வாய்ப்புகளை கெடுத்தார்’ என பகீரங்கமாக புகார் கூறியிருந்தார்.

bailwan

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளரும், கவுண்டமணியுடன் பல திரைப்படங்களில் காமெடி காட்சியில் நடித்தவருமான பயில்வான் ரங்கநாதன் ‘ ஆவாரம் பூ படத்தில் நான் ஷர்மிலியின் கணவராக நடித்திருந்தேன். ஒரு காட்சியில் ஷர்மிலியை அலேக்கா தூக்கி சுத்துவது போல் நடித்திருந்தேன். இது கவுண்டமணிக்கு பிடிக்கவில்லை. எனவே, அதன்பின் பல படங்களில் என்னை அவர் அவருடன் நடிக்க அனுமதிக்கவில்லை’ என கூறியுள்ளார்.

ஆவாரம் பூ திரைப்படம் பரதன் இயக்கத்தில் வினித், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்து 1992ம் வருடம் வெளியானது. இந்த படத்தில்தான் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என பயில்வான் பேசும் வசனம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேரி விஷயத்தில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் – இரட்டை முகத்தை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.