Cinema History
எம்.ஆர்.ராதா-வுக்கு எதுவும் ஆகக்கூடாது!. வேண்டிக்கொண்ட எம்.ஜி.ஆர். அந்த மனசுதான் கடவுள்
1967ம் ஆண்டு ஜனவரி மாதம் திரையுலகில் மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கே அதிர்ச்சியை கொடுத்த செய்தி எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம்தான். ‘பெற்றால்தால் பிள்ளையா’ படத்தின் தயாரிப்பாளருக்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சம் கடனாக கொடுத்திருந்தார்.
ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகியும் அப்பணத்தை தயாரிப்பாளரால் எம்.ஆர்.ராதாவுக்கு கொடுக்க முடியவில்லை. இது தொடர்பான பஞ்சாயத்து எம்.ஜி.ஆரிடம் சென்றபோதுதான் எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரின் கழுத்தில் சுட்டுவிட்டார். பதிலுக்கு எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவை சுட்டார். எம்.ஆர்.ராதா சுட்டதில் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.
நாடகங்களில் இருவரும் நடித்துக்கொண்டிருந்த போதே எம்.ஆர்.ராதாவுடன் பாசமாக பழகியவர் எம்.ஜி.ஆர். அவரை எப்போதும் அண்ணன் என அழைப்பார். எம்.ஆர்.ரதாவும் எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா’ என பாசமாக அழைப்பார். ஆனால், அந்த துப்பாக்கி சூடு சம்பவம் இருவரையும் பிரித்துவிட்டது. அதன்பின் எம்.ஆர்.ராதாவிடம் பேசுவதையே எம்.ஜி.ஆர் தவிர்த்துவிட்டார். அதேநேரம், பின்னாளில் எம்.ஆர்.ராதா தனது தவறை புரிந்துகொண்டு வருத்தப்பட்டும் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் பிறவியேலேயே மனிதாபிமானம், பிறர் மீது கருணை கொள்ளும் மனம் போன்ற உயர்ந்த பண்புளை கொண்டிருந்தார். பகைவனுக்கும் அருள்வாய் என சொல்வது போல தனக்கு தீங்கு செய்த பலருக்கும் கூட பின்னாளில் அவர் பெரிய உதவிகளையெல்லாம் செய்துள்ளார். எம்.ஆர்.ராதா சுட்டு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய எம்.ஆர்.ராதா உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
எம்.ஆர்.ரதா எம்.ஜி.ஆரிடம் பல உதவிகளை பெற்று, துப்பாக்கி குண்டை பரிசாக கொடுத்தார். ஆனாலும், அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என நினைத்து, எம்.ஆர்.ராதாவுக்கும் உயர்ந்த சிகிச்சை கொடுங்கள் என சொன்னார். சிறைத்தண்டனை முடிந்து ராதா வெளியே வந்த பின்னர் குற்ற உணர்வு காரணமாக எம்.ஜி.ஆரை சந்திக்க தயங்கினார். ஆனால், ஒரு நிகழ்ச்சியில் அவரை பார்த்து சகஜமாக நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில் நான் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்டேன் என எம்.ஆர்.ராதா கண் கலங்கிய சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடாகூடமான கேள்வியை கேட்ட நிருபர்!.. எம்.ஆர்.ராதா சொன்ன பதில் என்ன தெரியுமா?…