தமிழ் ஹீரோலாம் இப்படி நடிப்பாங்களா?.. நான் ஏன் நடிக்கணும்!. படப்பிடிப்பில் அடம்பிடித்த மம்முட்டி..

Published on: July 16, 2023
mamoty
---Advertisement---

கேரளாவில் பல சிறப்பான திரைப்படங்களில் நடித்தவர் மம்முட்டி. இங்கே ரஜினி – கமல் போல அங்கே மோகன்லால் – மம்முட்டி. 40 வருடங்களுக்கும் மேல் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இப்போதும் ஆக்டிவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை மம்முட்டி பெற்றுள்ளார்.

மலையாள திரைப்படம் மட்டுமில்லாமல் பல தமிழ் திரைப்படங்களிலும் மம்முட்டி நடித்துள்ளார். அழகன், தளபதி, ஆனந்தம், மறுமலர்ச்சி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

mamoty

கே.பாரதி இயக்கத்தில் மம்முட்டி, தேவயாணி, மன்சூர் அலிகான், ரஞ்சித் உள்ளிட்ட பலரும் நடித்து 1998ம் வருடம் வெளியான திரைப்படம் மறுமலர்ச்சி. இப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு பாம்பு தேவயாணியை கொத்த வரும் போது அவரின் கையை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றிவிடுவார் மம்முட்டி. அதை தவறாக புரிந்துகொண்ட தேவயாணி அவரின் கன்னத்தில் அறைந்துவிடுவார்.

mamoty

அதன்பின் மம்முடியை அந்த ஊரை சேர்ந்த ரஞ்சித் கட்டி வைத்து வேட்டியை அவிழ்த்து கட்டையால் அடிப்பார். இந்த காட்சியை இயக்குனர் சொன்னதும் மம்முட்டி இதில் நடிக்க சம்மதிக்கவில்லை. ‘உங்க ஊர் ஹீரோ இப்படி நடிப்பாரா?.. என்ன மட்டும் இப்படி நடிக்க சொல்றீங்க?’ என கோபமாக கேட்டுள்ளார்.

இயக்குனர் எவ்வளவு சொல்லியும் அந்த காட்சியில் நடிக்க மம்முட்டி சம்மதிக்கவில்லை. இந்த காட்சி இல்லையெனில் படமே இல்லை என சொல்லிவிட்டு இயக்குனரும் போய் ஓரமாக அமர்ந்துவிட்டார். அதன்பின் மம்முட்டி அந்த காட்சியில் நடித்து கொடுத்தார். அந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. படத்தை பார்த்த மம்முட்டி ஹீரோ பாரதியை அழைத்து வெகுவாக பாராட்டினாராம்.

இதையும் படிங்க: ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன்- ராஜ்கிரண் அட்டூளியம்; கதறிய தயாரிப்பாளர்!!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.