விவேக் படத்தை அப்படியே விட்டுட்டு வா!. காமெடி நடிகருக்கு வலைவிரித்த வடிவேலு!..

Published on: July 16, 2023
vadivelu and vivek
---Advertisement---

தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு பல வருடங்கள் முன்பே நடிக்க வந்தவர் விவேக். பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு பல திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் கவுண்டமணி உச்சத்தில் இருந்தாலும் விவேக்கும் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்ததால் இவருக்கு சின்ன கலைவாணர் பட்டமும் கிடைத்தது.

கவுண்டமணியின் மார்க்கெட் கொஞ்சம் சரிய துவங்கிய நேரத்தில் விவேக் அதிக படங்களில் நடிக்க துவங்கி முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார். ஒருபக்கம், வடிவேலுவும் பல படங்களில் நடித்து வந்தார். வடிவேலுவுக்கும், விவேக்கும்தான் போட்டி என்கிற நிலை உருவானது. இருவரும் இணைந்தும் சில படங்களில் நடித்துள்ளனர்.

vivek1
vivek1

விவேக் எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். வாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் சின்ன சின்ன காமெடி நடிகர்களை தன்னுடன் நடிக்க வைப்பார். ஆனால், வடிவேல் வேறுமாதிரி குணம் கொண்டவர். தன்னை யார் மதித்து, தன்னிடம் வாய்ப்பு கேட்டு அலைகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார். வடிவேலுவுடன் நடிக்க வேண்டுமெனில் அவரின் அலுவலகத்தில் கால்கடுக்க பல மணி நேரங்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். மேலே இருந்து அவர் எட்டி பார்க்கும்போது யாராவது உட்கார்ந்திருந்தால் அவர்களை அனுப்பி விடுவார். பல மணி நேரம் நின்று கொண்டே இருந்தவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

vivek2
vivek2

விவேக் சின்ன சின்ன நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வடிவேலுவுக்கு பிடிக்காது. ‘அவனையெல்லாம் வளர்த்து விடாதே’ என விவேக்கிடம் சொல்வார். சின்ன நடிகர்களை அப்படியே கீழயே வைத்திருக்க வேண்டும். வளரவிட்டால் நமது வாய்ப்பை கெடுத்து விடுவார்கள் என்கிற பயம் வடிவேலுக்கு இருந்தது.

இந்நிலையில், விவேக் மற்றும் வடிவேலுவுடன் சில படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த மீசை ராஜேந்திரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘பசுபதி கோ ராசாக்காபாளையம் படத்தில் விவேக்குடன் சில காட்சிகளில் நடித்து கொண்டிருந்தேன். படப்பிடிப்பு இடைவேளையில் ஒருவர் வந்து ‘வடிவேல் சார் உங்களை கூப்பிட்டார். இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு வர சொன்னார்’ என அழைத்தார். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் படத்திற்கு வருகிறேன் என சொன்னேன். அதன்பின் வடிவேல் என்னை அழைக்கவில்லை. விவேக்கின் வளர்ச்சி மீது இருந்த பொறாமையில்தான் வடிவேல் அப்படி நடந்து கொண்டார்’ என ராஜேந்திரன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: காதல் மோசடி வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய விக்ரமன்.. இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.