யாருக்கும் தெரியாமல் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! – ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்..

Published on: July 17, 2023
---Advertisement---

அடிக்கடி சர்ச்சையை கிளப்பும் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் திருமணம் செய்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் என்பவரையும், ராஜன் ஆனந்த் என்பரையும் திருமணம் செய்துகொண்டு, விவாகரத்து பெற்றுவிட்டார்.

இவர் அடுத்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதன் பின்னர், நீண்ட நாட்கள் அமைதியாக இருந்த வனிதா விஜயகுமார், கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.

Vanitha
Vanitha

அந்த நேரத்தில் அவரது மனைவி, தன்னை முறையாக விவாகரத்து செய்துகொள்ளாமல் பீட்டர் பால் வேறு திருமணம் செய்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதன் பின்னர் எளிமையாக கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட வனிதா மற்றும் பீட்டர் பால் தம்பதி கோவாவிற்கு ஹனிமூன் சென்றனர். அங்கேயே சண்டை போட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. அப்போது வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். பீட்டர் பாலுடனான உறவை முறித்துக்கொண்ட பிறகு இனி திருமணம், காதல் என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடம் இல்லை என்று கூறியிருந்தார் வனிதா.

vanitha

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது, தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கூறுவது சினிமாவை. தான் முதலில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்ததையும், பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளதையும் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளார். இனி அவரின் வாழ்க்கையில் காதல், கணவர் எல்லாம் சினிமா தான் என்றும் படங்களில் நடிப்பதில் மட்டுமே இனி கவனம் செலுத்த உள்ளதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க-பிரகாஷ்ராஜுடன் வாழ்ந்த 16 வருட வாழ்க்கை!.. மனம் திறக்கும் லலிதா குமாரி..