Connect with us

Cinema News

எதே.. உசுர கொடுக்க கோடி பேரா.. ’ஜெயிலர்’ ரஜினிகாந்தை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ’ஹுகும்’ பாடல் நேற்று வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. எப்படி எம்ஜிஆர் தனது எதிரிகளுக்கு பாடல் வரிகள் மூலம் பதில் கொடுத்தாரோ அதே போல ரஜினிகாந்தும் நடிகர் விஜய்க்கு தக்க பாடம் புகட்டி இருக்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் சமூக வலைதள சண்டையில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த சண்டைக்கு எரிபொருள் ஊற்ற ப்ளூ சட்டை மாறன் தனக்கு கிடைத்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டார். பாடல் வரிகளை வைத்து தொடர்ந்து ட்ரோல் ட்வீட்களை பதிவிட்டு மேலும், ரசிகர்கள் சண்டையை பெரிதாக பற்ற வைத்து வருகிறார்.

”பெயர தூக்க நாலு பேரு. பட்டத்த பறிக்க நூறு பேரு., Commander, Prince, Thotti Jaya and Captain Miller?” என்கிற ட்வீட்டை பதிவிட்டு ரஜினிகாந்தின் பெயரை தூக்க கமாண்டர் விஜய், பிரின்ஸ் சிவகார்த்திகேயன், தொட்டி ஜெயா சிம்பு மற்றும் கேப்டன் மில்லர் தனுஷ் தான் போராடுகின்றனர், அவர்களை தான் ரஜினிகாந்த் சொல்கிறார் என தனது கருத்தை வெளியிட்டு பல்வேறு முன்னணி நடிகர்கள் ரசிகர்களையும் வம்பிழுக்க பெரிய வலையே வீசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மேலும், ரஜினிகாந்தை வம்பிழுக்கும் விதமாக, ”சிறைக்காவலர்: பாடல் வரி.. குட்டிச்சுவத்த எட்டிப்பாத்தா உசுர கொடுக்க கோடி பேரு.” என்கிற வரிகளை பதிவிட்டு வடிவேலுவின் அண்ணே உயிரை கொடுங்க என்கிற காமெடி காட்சியை பதிவிட்டு ரஜினிகாந்தின் உயிரை கேட்டு அவரது கோடி ரசிகர்கள் துரத்தப் போறாங்கப்பா பார்த்து என உண்மையாவே மரண கலாய் கலாய்த்துள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top