புருஷன் மீதே போலீஸ் கம்ப்ளெயிண்ட்!. பரபரப்பை ஏற்படுத்திய சீரியல் நடிகைகளின் லிஸ்ட்!..

Published on: July 18, 2023
serial
---Advertisement---

சமீப காலமாக பல சீரியல் நடிகர் நடிகைகள், படு ஜோராக திருமணம் செய்துகொண்டு, பின் உடனேயே சண்டை போட்டு பிரிந்துவிடுகின்றனர். அவர்கள் வீட்டில் சண்டை போட்டால் யாருக்கும் தெரியாமலாவது இருக்கும். ஆனால் இப்போதெல்லாம், சமூக வலைதளங்களிலும், யூடியூப்பிலும் மாரி மாரி சண்டை போட்டு அடித்துக்கொள்கின்றனர். இதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்டாக உள்ளது. இவர்களின் பஞ்சாயத்து தான் அடுத்த ஒரு மாதத்திற்கு ஹாட் நியூஸ் என்றே கூறலாம். அப்படி கணவன் மீது போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்த 5 தமிழ் சீரியல் நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

திவ்யா ஸ்ரீதர்

divya1
divya1

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரும், செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்வும் காதலித்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டர். திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகை திவ்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததால், அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்நிலையில் திவ்யா கர்ப்பாகியுள்ளார். அந்த நேரத்தில் அவர்கள் சண்டை போட்டபோது, அவரின் வயிற்றில் அர்னவ் எட்டி உதைத்ததாக கூறி போலீஸ் ஸ்டேஷனில் நடிகை திவ்யா ஸ்ரீதர் புகார் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துவிட்டனர். 

 

சம்யுக்தா 

ravi
vishnukanth samyuktha

சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம அறிமுகமான நடிகை சம்யுக்தாவும், நடிகர் விஷ்னுகாந்த்தும் 8 மாதங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஒரே மாதத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வந்தனர். இந்த பஞ்சாயத்து இன்று வரை ஓயவில்லை என்றே கூறலாம்.  இந்த பிரச்சனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் நடிகை சம்யுக்தாவின் உறவினர்களை நடிகர் விஷ்னுகாந்த் போனில் மிரட்டியதாக அவர் போலீசில் கொடுத்திருந்தார். இவர்கள் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

 

ரச்சிதா மகாலட்சுமி

rachithaa
ரக்சிதா

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி, அவருடன் சேர்ந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மனக்கசப்பு காரணமாக அவர்கள் தனிதனியாக வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த மாதம் நடிகை ரச்சிதா தனது கணவர் தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் கூறி போலீசில் புகார் கொடுத்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ராதா

sundara travels Radha
sundara travels Radha

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த ராதா, தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் தன் மீது சந்தேகப்பட்டு, தன்னை அடித்து, சித்தரவதை செய்கிறார் என்று போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

 

ஜெயஸ்ரீ

jayasree

வம்சம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை ஜெயஸ்ரீயும், நடிகர் ஈஸ்வரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.  இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடிகை ஜெயஸ்ரீ, தன் கணவர் ஈஸ்வர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், தன் கணவர் சீரியல் நடிகை மாகலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வர் தன்னை கொடும்ப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

இதையும் படிங்க- முத்துராமன் சாவுக்கு காரணமான அந்த ஒரு விஷயம்! பிரபலம் சொன்ன பகீர் தகவல்

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.