நடிகைகள் நடிக்க மறுத்த ஐந்து மாஸ் திரைப்படங்கள்!!.. இவங்க நடிச்சிருந்தா கூட நல்லா தான் இருந்திருக்கும்!!..

Published On: July 18, 2023
tamil actress (2)
---Advertisement---

இந்த நடிகைகள் தவறிய ஐந்து திரைப்படங்கள்!!..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் வேறு ஒரு நடிகை நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் அந்த படத்தில் நடித்த ஹீரோயினை விட இவர் நடித்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அப்படின்னு ஃபீல் பண்ற அளவிற்கு, அந்த ஹீரோயின் இருந்தால் நன்றாக நடித்திருப்பார் என்ற எண்ணத்தை தோண வைக்கிறது. இந்த வகையில் நிறைய நடிகைகள் நடிக்க தவறிய ஐந்து திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கிரண் ரத்தோடு

அதில் முதலாவது இடத்தில் இருப்பது நடிகை கிரண் ரத்தோடு இவர் ஜெமினி திரைப்படத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பாபா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெமினி படத்தில் கமிட்டான காரணத்தினால் பாபா படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. நடிகை கிரண் இன்றுவரை சூப்பர் ஸ்டாருடன் தன்னால் நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு எப்போதும் உண்டு.

baba
baba

மஞ்சு வாரியர்

அடுத்ததாக 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு பதிலாக மஞ்சு வாரியர் அவர்கள் நடிப்பதாக இருந்தது பிறகு குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை.ஆனால் அந்த திரைப்படம் வெற்றியானது தொடர்ந்து ஒரு நேர்காணலில் அந்தப் படத்தில் நான் நடிக்காமல் போனதை நினைத்து இன்றும் வருந்துகிறேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க- சபதத்தில் ஜெயித்து காட்டிய கவுண்டமணி!.. சோலோவாக பின்னி பிடலெடுத்த படங்கள்!.. செந்திலுக்கு இது தேவையா?!..

96
96

காஜல் அகர்வால்

இதனை எடுத்து பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகர் ரம்யா அவர்களுக்கு பதிலாக காஜல் அகர்வால் முதலில் புக் செய்யப்பட்டிருந்தார். இதற்காக நிறைய போட்டோ சூட்டுகளும் எடுக்கப்பட்டது பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை காஜல் அகர்வாலுக்கும் தனுஷுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி செட் ஆகாத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டார். பிறகு அவருடைய கதாபாத்திரத்தில் நடிகை குத்து ரம்யா அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

polladhavan
polladhavan

அசின்

அடுத்ததாக சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிகை பூமிகா அவர்களுக்கு பதிலாக முதலில் அசின் தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.அந்த நேரத்தில் அசின் அவர்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்த தருணம் அது பிறகு கதையில் அவர் நீண்ட நேரம் காட்சிகளில் இல்லாத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனை அடுத்து அந்த படத்திற்கு பூமிகா அவர்களை இயக்குனர் அவர்கள் தேர்வு செய்தார்கள் இதனை அடுத்து அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எடுத்து அசின் அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்த படத்தில் நான் நடிக்க இருந்தது கதாபாத்திரம் பெரிய அளவிற்கு இருக்காது என்று நினைத்தேன், ஆனால் இன்று மக்கள் அந்த கதாபாத்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.

sillunu oru kadhal
sillunu oru kadhal

அசின்

அடுத்ததாக நடிகர் அஜித் உடன் பில்லா படத்தில்  முதன்முதலாக அசின் தான் நடிக்க இருந்தாராம், இதற்காக நிறைய புகைப்படங்களையும் எடுத்துள்ளனர் படக் குழுவினர். இதனை அடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து அசினுக்கு பதிலாக நயன்தாரா அவர்களை தேர்வு செய்துள்ளனர். குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நயன்தாரா அந்த ரோலில் கச்சிதமாக இருப்பார் என்பதன் காரணமாக அசினை நீக்கிவிட்டு அந்த ரோலில் நயன்தாராவை புக் செய்துள்ளனர்.

 

asin billa
asin billa

இப்படி இந்த நடிகைகள் அனைத்தும் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பினை கோட்டை விட்டு நடிக்க தவறிவிட்டனர்.

 

இதையும் படிங்க- சபதத்தில் ஜெயித்து காட்டிய கவுண்டமணி!.. சோலோவாக பின்னி பிடலெடுத்த படங்கள்!.. செந்திலுக்கு இது தேவையா?!..