Connect with us
rajini

Cinema News

‘லால்சலாம்’ படப்பிடிப்பில் இப்படி ஒரு கொடுமையா? ஆசையாக வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் லால் சலாம். இந்தப் படத்தில் மொகைதீன் பாயாக ரஜினி ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்த நிலையில் பேச் வேலைகள் மட்டும்  இருக்கின்றதாம்.

ஏற்கெனவே ஜெய்லர் படத்திற்காக முழு ஈடுபாட்டை கொடுத்து வரும் ரஜினி இந்தப் படத்தில் ஒரு முஸ்லீம் பாயாக நடித்திருப்பது அனைவரது  மத்தியிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

rajini1

rajini1

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த லால்சலாம் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றிய ஒரு தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சில தினங்களுக்கு முன் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றதாம்.

கிரிக்கெட் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த காட்சிக்காக பார்வையாளர்கள் தேவைப்பட்டார்களாம். உடனே சுற்றி இருந்தவர்களை வரவழைத்து தலா 400 சம்பளமாக கொடுக்கிறோம் என கூறி அந்த காட்சியில் இடம் பெற வைத்திருக்கின்றனர்.

ஆனாலும் அன்றைக்கு உள்ள சம்பளத்தை கொடுக்கவில்லையாம். மறுநாளும் இதே போல் ஒரு காட்சி. மீண்டும் அவர்களை அழைத்திருக்கிறார்கள். ஆனாலும் மறு நாளும் சம்பளம் கொடுக்கவில்லையாம். பின்னர் சில பேட்ஜ் வேலைகள் இருக்கிறது. அதை மட்டும் முடித்து விடுகிறோம். மொத்தமாக சம்பளத்தை கொடுக்கிறோம் என கூறி அந்த நபர்களை மீண்டும் அழைத்திருக்கிறார்கள். ஆனாலும் அன்றும் கொடுக்கவில்லையாம்.

rajini2

rajini2

இதனால் கடுப்பான ஒரு ரசிகர் இந்த  மாதிரி அநியாயம் எல்லாம் நடக்கின்றது. இதை கவனிக்க மாட்டீர்களா? என கூக்குரலிடுகின்றார். ஆகவே இதை லைக்கா நிறுவனத்தின் காதுக்கு கொண்டு போக வேண்டும் என கோடம்பாக்கத்தில் கூறினார்கள்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top