Connect with us
tam

Cinema News

‘காவாலா’ பாடலால் ரஜினியை மறந்த ரசிகர்கள்! ஆனால் அதுக்கு பின்னாடி ஒரு strategyயே இருக்காம்..

தமிழ் சினிமாவில் ரஜினி என்றாலே ஒரு தனி மாஸ் தான். அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு மிகவும் பொருந்தக்கூடிய நடிகராகவே ரஜினி திகழ்கிறார். அந்தப் பட்டத்துக்கு எத்தனையோ பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர் ஒரு பொதுச்சொத்து என பாடலாசிரியரான சூப்பர் சுப்பு கூறியிருக்கிறார்.

70 வயதை கடந்தாலும் ரஜினி இன்னமும் அதே தெம்புடனும் சுறுசுறுப்புடனும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒரு நடிகராகவே இருந்து வருகிறார். ரஜினியின் படங்களை விட புதிதாக ரிலீஸ் ஆகக் கூடிய படங்களில் வரக்கூடிய ஓப்பனிங் சாங் பற்றிய எதிர்பார்ப்புதான் அனைவர் மத்தியிலும் இருக்கும்.

tam1

tam1

அந்த வகையில் ஜெயிலர் படத்தில் வெளியான முதல் சிங்கிளான காவாலா சாங் பட்டிதொட்டியெல்லாம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் வெளி நாடுகளில் இருக்கும் பல பேர் அந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பாடலில் ரஜினி இருக்கிறாரா என்று கேட்கிற அளவுக்கு தமன்னா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பாடலை பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தியது. ஏனெனில் ரஜினி சாங் என்றாலே அவருக்கு என்று சில வரைமுறைகள் இருக்கும். மாஸ் இருக்கும்.

இதையும் படிங்க : ‘லால்சலாம்’ படப்பிடிப்பில் இப்படி ஒரு கொடுமையா? ஆசையாக வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆனால் இந்தப் பாடலில் அப்படி எதுவும் இல்லாமல் தமன்னா மட்டுமே தெரிந்தார். இதை பற்றி பாடலாசிரியர் சூப்பர் சுப்புவிடம் கேட்கும் போது  ‘முதலில் பாட்ஷா அடிவாங்குவார், அதன் பிறகு அதை டபுளாக திருப்பி கொடுப்பார். அப்படி வந்த பாடல்தான் இரண்டாவது சிங்கிள். இது நெல்சனும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து செய்த ஒரு strategy’ என்று கூறினார்.

tam2

tam2

ஆரம்பத்திலேயே எல்லாத்தையும் காட்டிவிட்டால் அதற்குள் இருக்கும் சுவாரஸ்யம் போய்விடும். அதனால் தான் காவாலா பாடல்  முதலில் வெளியானது என்றும் கூறினார். நேற்று வெளியான செகண்ட் சிங்கிள் ரஜினிக்கு ஏற்ற வகையில் தான் அமைந்திருந்தது. இதை சூப்பர் சுப்புதான் எழுதியிருந்தார். இந்தப் பாடல் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே வெயிட் பண்ணி ரிலீஸ் செய்தார்கள் என்று கூறினார். ஆனால் அது ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்பதை ரசிகர்கள்தான் சொல்லவேண்டும்.

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top