அட்லியின் உதவியாளரை நம்பவைத்து கழட்டிவிட்ட சிவகார்த்திகேயன்!.. நடுத்தெருவில் நிக்கவச்ச கொடுமை!…

Published on: July 18, 2023
sivakarthikeyan
---Advertisement---

திரையுலகை பொறுத்துவரை ஒரு பெரிய இயக்குனரின் உதவியாளராக இருந்தால் உடனே பெரிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைத்துவிடும். சில சமயம் அதுவே படம் கிடைக்காமலும் போக செய்து விடும். பாரதிராஜாவின் உதவியாளர் பாக்கியராஜ் இயக்குனராக மாறினார்.

அவரின் உதவியாளர்கள் பார்த்திபன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் பலரும் இயக்குனராக மாறினார்கள். அதேபோல், இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ, வசந்தபாலன், அறிவழகன், சிம்பு தேவன், ஏ வெங்கடேஷ், மாதேஷ், பாலாசி சக்திவேல் என பலரும் இயக்குனராக மாறினார்கள்.

ashok

இதில் அட்லியோ ஷங்கருக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிட்டார். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி இப்போது ஷாருக்கானை வைத்து திவான் படத்தை இயக்கி வருகிறார். அட்லியிடம் உதவியாளராக இருந்தவர் அசோக். இவர் சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொல்லி ஓகே செய்தார். அந்த படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பும் வைக்கப்பட்டு, பட அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பின் படப்பிடிப்பு நடக்கவே இல்லை.

Sivakarthikeyan
Sivakarthikeyan

இத்தனைக்கும் அட்லியின் உதவியாளர், சிவகார்த்திகேயன் ஹீரோ என்றதும் பல தயாரிப்பாளர்கள் அப்படத்தை தயாரிக்க பலரும் முன் வந்தனர். ஆனால், சிவகார்த்திகேயன் கழண்டு கொண்டதும் கடந்த 3 வருடங்களாக பட வாய்ப்பு இல்லமால் அசோக் வீட்டில் இருக்கிறாராம்.

இந்நிலையில், அந்த கதையை கேட்ட ஆர்.ஜே.பாலாஜி ‘நான் நடிக்கிறேன்’ என முன் வந்துள்ளாராம்.

இதையும் படிங்க: நடிகர் அஸ்வினுக்கு விரைவில் டும் டும் டும்!. பொண்ணு யாரு தெரியுமா?….

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.