முதல்வரான பின்பும் ஜெ.வை ஜெய்சங்கர் இப்படித்தான் அழைப்பார்!.. சீக்ரெட் சொன்ன உதவியாளர்!..

Published on: July 19, 2023
jai shankar
---Advertisement---

சினிமா டூ அரசியல்:

வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா. மிகவும் சிறிய வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர். அடுத்த படமே எம்.ஜி.ஆருடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக மாறினார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். அதேபோல் சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் ஆகியோருடனும் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் இறங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி முதலமைச்சராகவும் மாறினார்.

mgr3
jaishankar jayalalitha

ஜெயலலிதாவை மாற்றிய ஜெய்சங்கர்:

சினிமாவில் அவர் நடித்து கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் புத்தகம் படிக்க வைத்திருப்பார். அதை உடைத்தவர் ஜெய்சங்கர்தான். ஏனெனில், அவர் எல்லோருடனும் எப்போதும் கலகலப்பாக, ஜாலியாக பேசுவார்.

Jaishankar
Jaishankar

ஜெய்சங்கரின் மேனேஜர் கணேஷ் பாபு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஜெய்சங்கர் கலகலப்பாக பேசும் பழக்கமுடையவர். ஜெயலலிதாவை அம்மு என்றுதான் அழைப்பார். ‘ஹாய் அம்மு’ என அவர் ஜாலியாக பேசும்போது ஜெயலலிதாவால் அவருடன் பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே, அவருடன் நல்ல நட்புடன் பழகினார். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது ஒருமுறை என்னை அவரின் வீட்டிற்கு ஜெய்சங்கர் கூட்டி சென்றார். அப்போதும் ‘ஹாய் அம்மு எப்படி இருக்க?’ என்றுதான் ஜெய்சங்கர் பேசினார்.

நான் திருச்சியில் ஜெய்சங்கரின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தேன். என்னை அவரின் உதவியாளராக்கி என்னை வளர்த்துவிட்டவர் அவர்தான் என கணேஷ் பேசினார்.

இதையும் படிங்க: குழந்தையிலிருந்தே பல பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர்- கண்கலங்கிய காதல் பட நடிகை!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.