Cinema History
சிவாஜிக்கு சவால் விட்டு கிளம்பிய பாரதிராஜா!.. நடிகர் திலகம் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்!…
தமிழ் சினிமாவில் மண் வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய பதினாறு வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாயை திருப்பி போட்டது. ஸ்டுடியோவில் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்த காலத்தில், வாய்க்கால், வரப்பில், கரட்டு மேட்டில் கேமரா கோணம் வைத்தவர் பாரதிராஜா. ஸ்டுடியோவிலிருந்த சினிமா வாய்க்கால் பக்கம் வந்தது பாரதிராஜாவால்தான்.
கிராமத்து மனிதர்களின் கோபம், காதல்,அன்பு, ஆவேசம், மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கை, மொழி என அனைத்தையும் திரையில் காட்டியவர். அதனால்தான் அவரின் படங்களில் கிராமத்து மக்கள் ஒன்ற முடிந்தது. கிழக்கே போகும் ரயில், காதல் ஓவியம், கடலோர கவிதைகள், மண் வாசனை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியவர்.
இதையும் படிங்க: குழந்தையிலிருந்தே பல பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர்- கண்கலங்கிய காதல் பட நடிகை!
இவர் இயக்கிய முதல் மரியாதை படத்தில் இதுவரைக்கும் தமிழ் சினிமா பார்த்திராத சிவாஜியை காட்டியிருந்தார். விக் இல்லாத, சாதாரணமாக பேசும் சிவாஜியை அதுவரை ரசிகர்கள் பார்த்ததே இல்லை. சிவாஜியை அப்படி காட்டும் துணிச்சல் பாரதிராஜாவுக்கு மட்டுமே இருந்தது.
தேனி மாவட்டம் அல்லி நகரில் கொசு மருந்து அடிக்கும் அரசு வேலையில் இருந்தவர் பாரதிராஜா. நடிகராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசையாக இருந்தது. ஆனால், இயக்குனராக மாறினார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்கவும் துவங்கினார். கடந்த சில வருடங்களில் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
சிவாஜியிடம் ஒருமுறை பாரதிராஜா பேசிக்கொண்டிருந்த போது ‘நான் ஊரிலிருந்து கிளம்பும் போது நானா? சிவாஜியா? பாத்துடுறேன் என்றுதான் கிளம்பினேன்’ என சொல்ல, அதற்கு சிவாஜி எல்லாம் சரிடா உன் ஊர்ல முகம் பாக்குற கண்ணாடிலாம் இருக்காதா?’ என கேட்டாராம்.
இதையும் படிங்க: முதல்வரான பின்பும் ஜெ.வை ஜெய்சங்கர் இப்படித்தான் அழைப்பார்!.. சீக்ரெட் சொன்ன உதவியாளர்!..