Cinema News
டிக்கெட் விலையை குறைக்கனுமா? அந்த நாலு ஹீரோவாலதான் முடியும் – விஜய் ஆண்டனி சொன்ன யோசனை
இசையமைப்பாளராக பின்னனி பாடகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் விஜய் ஆண்டனி. இப்போது பல படங்களில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் நடித்து வெளியான அனைத்துப் படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
முதலில் பல படங்களில் சௌண்ட் இன்ஜினியராகத்தான் பணியாற்றினார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு முதல் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்தார். இவரின் இசையில் வெளிவந்தப் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
பெரும்பாலும் குத்துப் பாடல்களாகவே இசையமைத்துக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. மீண்டும் அந்த இசையமைப்பாளரை எப்பொழுது காண்போம் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவர் முதன் முதலில் நான் என்ற படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பிச்சைக்காரன், கொலைகாரன், திமிரு போன்ற ஆக்ஷன் கலந்த திரில்லர் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாக உள்ள கொலை படத்தின் புரோமோஷனுக்காக நேற்று பத்திரிக்கையாளர் பேட்டியில் கலந்து கொண்டு விஜய் ஆண்டனி பேசினார்.
இதையும் படிங்க : குழந்தையிலிருந்தே பல பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர்- கண்கலங்கிய காதல் பட நடிகை!
அப்போது நிரூபர்கள் தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி ‘சின்ன சின்ன படங்கள் வெளியாகும் போது ஏசிக்கு ஆகும் செலவுக்கான தொகை கூட வர மாட்டேங்குது. அதை ஈடுகட்ட தான் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய ஹீரோக்கள் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அதிக விலைக்கு விற்று அந்த தொகையை ஈடுகட்டிக் கொள்கின்றனர்’ என்று கூறினார்.
மேலும் அவரவர் ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் சில சலுகைகள் செய்து அந்த நாலு ஹீரோக்கள் டிக்கெட் விலையை நிர்ணயிக்கலாம் என்று கூறினார். அதற்கு ஒரு நிரூபர் நீங்கள் செய்வீர்களா? என்று கேட்க அதற்கு விஜய் ஆண்டனி ‘ நான் சொன்னது அந்த ஓப்பனிங் ஹீரோஸ், நான் எல்லாம் ஒரு சாதாரண ஹீரோ’ என்று சொல்லி நழுவினார்.
இதையும் படிங்க : சிவாஜிக்கு சவால் விட்டு கிளம்பிய பாரதிராஜா!.. நடிகர் திலகம் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்!…