ரியல் ப்ளே பாயாக இருந்த டாப் 5 நடிகர்கள் – அப்பவே ஆட்டம் போட்ட ஜெமினிகணேசன்

Published on: July 20, 2023
gemini
---Advertisement---

என்னதான் சினிமாவில் ஹீரோயிசத்தை காட்டினாலும் ஒரிஜினாலிட்டியை யாராலும் மாற்ற முடியாது. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஆசை என்பது பொதுவானதுதான். அந்த ஆசை பேராசையாக மாறும் பட்சத்தில்தான் விளைவுகள் அதிகமாகின்றது. அப்படி சினிமாவில் பல பெண்களுடன் ஜாலியாக இருந்து ரியல் லைஃபில் ஒரு ப்ளே பாயாக இருந்த நடிகர்களைத்தான் இந்த லிஸ்ட்டில் பார்க்க இருக்கிறோம்.

ஜெமினிகணேசன் : ஜெமினி கணேசன் சினிமாவில் நடிக்க வரும் போதே அலமேலு என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அப்போது அவருக்கு வயது 19. அதன் பிறகு புஷ்பவள்ளி என்ற பெண்ணை கல்யாணம் செய்து அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் பாலிவுட்டில் கலக்கிக்  கொண்டிருக்கும் நடிகை ரேகா. அதன் பிறகு மூன்றாவதாக நடிகை சாவித்ரியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரையும் திருமணம் செய்து கொண்டார். உண்மையிலேயே காதல் மன்னனாகவே வாழ்ந்து வந்தார் ஜெமினி. இருந்தாலும் அவரின் ஆசை விடவில்லை. அவருடைய 78வது வயதில் கூட 50 வயது மதிக்கத்தக்க ஒரு லேடியை திருமணம் செய்யவேண்டும் என எண்ணியிருந்தாராம். அதற்குள் ஜெமினியின் மகன் மகள்கள் எல்லாரும் சேர்ந்து அந்த லேடிக்கு ஒரு குறிப்பிட்ட பணத்தை செட்டில் செய்து அனுப்பிவிட்டார்களாம். இப்படி 4 பெண்களுடன் காதல் வையப்பட்டு இருந்தார் ஜெமினி கணேசன் என்று சொல்லப்படுகிறது.

gemini1
gemini1

சிம்பு : உண்மையான ப்ளேபாய் என்றால் அது சிம்புதான். ஆரம்பத்தில் ரொம்பவே ஆட்டம் காட்டியவர். கூட நடிக்கும் அத்தனை சக நடிகைகளிடமும் மிகவும் நெருக்கமாக பழகுவார். முதன் முதலில் நடிகை நயன் தாராவுடனான  காதல் தான் வெளியில் வந்தது. அதுவும் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியே வந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டனர். அதனை அடுத்து நடிகை ஹன்சிகா, நிதி அகர்வால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இவரின் லிஸ்ட்டும் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றது. ஆனால் இதையெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆவாது என தெரிந்து கொண்ட சிம்பு ஓம் சிவனே போற்றி என சமீபகாலகாலமாக ஒரு சாமியாரை போல மாறி வருகிறார்.

simbu
simbu

 சித்தார்த் : ஜெமினியை போலவே சித்தார்த்துக்கும் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றதாம். அதன் பிறகு பாலிவுட்டில் சோகாலி கான் என்ற நடிகையுடன் நெருக்கம் காட்ட இவரது மனைவி சித்தார்த்தை பிரிந்து விட்டு சென்றுவிட்டாராம். இருந்தாலும் அந்த சோகாலி கானுடனும் இருந்த உறவை துண்டித்துக் கொண்டார் சித்தார்த். தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் வர நடித்துக் கொண்டிருந்த சித்தார்த் நடிகை சமந்தாவுடன் கமிட் ஆனார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நிலையை அடைந்தும் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு நடிகை சுருதி ஹாசனுடன் லிவ்விங் ரிலேஷன்சிப்பில் ஆறு மாதங்களாக இருந்தாராம். அதுவும் செட் ஆகவில்லை. கடைசியாக நடிகை அதீதீ ராவுடன் டேட்டிங்கில் இருக்கிறார் சித்தார்த். இதாவது நிலைக்குமா என்று பார்ப்போம்.

sitharth
sitharth

விஷால் : 40 வயதை கடந்தும் இன்னும் திருமணப் பந்தத்திற்குள்ளேயே போகாத ஒரு  நடிகர் விஷால். ஆனால் முதலில் திருமணம் நடந்திருக்க வேண்டியது விஷாலுக்குத்தான். ஏனெனில் பள்ளி தோழியான நடிகை வரலட்சுமியுடன் விஷால் மிகவும் நெருக்கமாக பழகிவந்தார். பல மேடைகளில் இருவரும் கல்யாணம் செய்துகொள்ள போகிறார்களா? என்று கேட்டாலும் இருவரும் மௌனத்தையே பதிலாக கொடுத்திருக்கின்றனர். அதனால் இவர்கள் தான் அடுத்த ஜோடி என்று நினைத்திருந்த நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் கிசுகிசுக்கப்பட்டார். அதுமட்டுமில்லாமல் லட்சுமி மேனன் இல்லாத விஷால் படங்களில் கூட அடிக்கடி லட்சுமி மேனனின் பெயரும் இடம்பெறும். ஆனால் அதுவும் செட் ஆகவில்லை. கடைசியாக ஒரு தொழிலதிபரின் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்த திருமணமும் நின்று போனது. அதிலிருந்தே விஷால் மிகவும் அப்செட்டில்தான் இருந்தார்.

vishal
vishal

கமல் : ரியல் காதல் மன்னன் கமல். இவருடைய லிஸ்ட்டும் மிகப்பெரியது. திருமணத்திற்கு முன்பே நடிகை ஸ்ரீவித்யாவுடன்  நெருக்கமாக பழகி வந்ததால் ஸ்ரீவித்யா கமலை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று கமல் ஸ்ரீவித்யாவை நிராகரித்தார். அதன் பிறகு தான் வாணியுடன் கமலுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து நடிகை கௌதமியுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். கமல் மகள்களின் வேண்டுகோளுக்கு இணங்க கௌதமி கமலை விட்டு பிரிந்து சென்றார். இருந்தாலும் கமல் பற்றிய கிசுகிசு குறைந்தபாடில்லை. நடிகை சிம்ரன், ஆண்டிரியா என பல நடிகைகளுடன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்து கொண்டே இருந்தன.

kamal
kamal

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.