
Cinema News
தமிழ் தெரியாதுன்னு என்ன தூக்கிட்டாங்க!.. ஆனா அந்த ஹீரோ?!.. அவமானப்பட்ட விஜயகாந்த்…
Published on
By
மதுரையிலிருந்து தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர் விஜயகாந்த். எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க, அப்படம் வெற்றியடையவே விஜயகாந்தின் மார்க்கெட் கொஞ்சம் மேலே போனது. தயாரிப்பாளர்களின் கவனமும் விஜயகாந்த் பக்கம் திரும்பியது. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து ஒருகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கே டஃப் கொடுத்தார்.
ஒரேநேரத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் வெளியாகி ரஜினி, கமலை விட விஜயகாந்தின் படங்கள் அதிகம் வசூல் செய்த சம்பவமும் பலமுறை நடந்துள்ளது. குறிப்பாக பி,சி செண்டர்களில் விஜயகாந்தின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. ஒருபக்கம், திரையுலகில் நன்றி மிக்கவராக, எல்லோரையும் சமமாக பார்க்கும் மனிதராக, மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராக விஜயகாந்த் இருந்தார்.
இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு எதிர்ப்பு!.. வேட்டிய மடிச்சிகட்டி 50 பேரை அடித்த விஜயகாந்த்!.. நிஜத்திலும் அவர் ஹீரோதான்!..
திரையுலகில் விஜயகாந்தை திட்டியர்கள் என யாருமே கிடையாது. அவரை பற்றி பேசுபவர்கள் எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒருவார்த்தை ‘விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது’ என்பதுதான்.
ஹீரோவாக நடிப்பதற்கு முன் விஜயகாந்த் பல அவமானங்களை சந்தித்துள்ளார். பல திரைப்படங்களிலுருந்து அவரை தூக்கியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசிய விஜயாகந்த் ‘அப்போது சேனாஸ் பிலிம்ஸ் என்கிற நிறுவனம் இருந்தது. அதிலிருந்து என்னை ஹீரோவாக நடிக்க அழைத்தார்கள். சரி நாமும் நடிப்போம் என சென்றேன். படப்பிடிப்பில் விரைவில் துவங்குகிறது என சொன்னார்கள்.
ஆனால், சில நாட்கள் அந்த படத்தில் வேறு ஹீரோ நடித்து கொண்டிருந்தார். ‘ஏன் இப்படி செய்துவிட்டீர்கள்?’ என கேட்க நான் அந்த அலுவகம் சென்றேன். இயக்குனரையும், தயாரிப்பாளரையும் என்னால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்த மேனேஜர் ‘உனக்கு சரியா தமிழ் வரலப்பா… அதனால உன்ன தூக்கிட்டாங்க’ என சொன்னார். இதற்கு பின்னால் வேறு ஒரு பெரிய நடிகர் இருந்தார் என சொன்னார்கள். எனக்கு அது உண்மையா என்றெல்லாம் தெரியாது’ என விஜயகாந்த் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: இந்த வயசுல லவ் , டூயட் எல்லாம் தேவையா? மறைமுகமாக ரஜினியை தாக்கிய தனுஷ்?
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....