Cinema News
இனிமே ஃபாரின் போய் ஆட்டம் போட முடியாது.. நடிகர்களுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர் சங்கம்!..
படம் முழுவதும் குடிசையில் வாழும் ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு ஓகே சொன்னவுடன், அடுத்த காட்சியிலேயே வெளிநாடு சென்று ஹீரோயினுடன் ஜாலியாக டான்ஸ் ஆடிவிட்டு வருவது தமிழ் சினிமாவின் கலாச்சாரம் என்றே கூறலாம். பல தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் ஒரே ஒரு டூயட் பாடலுக்காக சுவிட்சர்லாந்து செல்வது, பாரிஸ் செல்வது என ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருந்தனர்.
சமீப காலமாக பெரும்பாலான படங்களின் காட்சிகளே வெளிநாடுகளில் தான் எடுக்கப்படுகிறது. டூயட் என்றாலே வெளிநாடு லொகேஷன் தான் என்ற அளவிற்கு இயக்குநர்களும், நடிகர்களும் அட்ராசிட்சி செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக சில நடிகர்கள் ஃபாரின் சாங் இருந்தால் தான் நடிப்பேன் என்று டிமாண்ட் கூட வைத்தனர்.
இதனால் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு மட்டுமல்ல, திரைத்துறை தொழிலாளர்களின் வேலவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. மொத்த படத்தையும் வெளிநாட்டில் எடுத்தால், தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்படும். இதனையடுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் இணைந்து சில புதிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதன்படி இனி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும் எனவும், எல்லா தமிழ் படங்களின் படப்பிடிப்பையும் தமிழ்நாட்டிலேயே முடித்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க- இனிமே அப்படி நடிக்க மாட்டேன்.. ஏன்னா வயசாயிடுச்சி!.. தனுஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு!..