விஷ்ணுவின் அந்த அவதாரத்தையும் விட்டு வைக்காத பிரபாஸ்!.. ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Published on: July 21, 2023
---Advertisement---

நடிகர் பிரபாஸ் நடிச்சா இனி கடவுளாத்தான் நடிப்பேன் என்கிற ரேஞ்சுக்கே சென்று விட்டார். ஆதிபுருஷ் படத்தில் பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தில் நடித்த நிலையில், தற்போது, 10வது அவதாரம் என சொல்லப்படும் கல்கி அவதாரத்திலேயே தோன்றி உள்ளார்.

கீர்த்தி சுரேஷை வைத்து மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தை அப்படியே தத்ரூபமாக நடிகையர் திலகம் எனும் டைட்டிலில் இயக்கி தேசிய விருது குவித்தவர் இயக்குநர் நாக் அஸ்வின்.

ஸ்ருதிஹாசனை வைத்து பிட்ட கதலு படத்தில் ஏஐ தொழில்நுட்ப உலகில் ஒரு புதுமையான கதையை இயக்கி இருந்த நாக் அஸ்வின் தற்போது எதிர்கால உலகில் கல்கியின் அவதாரம் வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கல்கி 2898 ஏடி படத்தை இயக்கி உள்ளார்.

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் இதுதான்:

ப்ராஜெக்ட் கே எனும் டைட்டிலில் 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வந்த பிரபாஸின் புதிய படத்துக்கு கல்கி 2898 ஏடி என்கிற டைட்டிலை படக்குழுவினர் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற காமிக் கானில் வெளியிட்டுள்ளனர்.

இதற்காக நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், ராணா டகுபதி மற்றும் இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கே வெளியிடப்பட்ட படத்தின் முதல் க்ளிம்ஸ் இந்திய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்கு வெளியானது.

கல்கி அவதாரத்தையும் விடாத பிரபாஸ்:

நடிச்சா ஹீரோ தான் என காதல் படத்தில் வரும் காமெடி காட்சி போல பிரபாஸ் நடித்தால் இனிமேல் கடவுள் தான் சார் என்கிற ரேஞ்சுக்கு எங்கேயோ போய்விட்டார்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி மெகா தோல்வி படமாக அமைந்த ஆதிபுருஷ் படமே ராமாயண கதையை மையமாக வைத்து உருவானது தான். அதில், விஷ்ணுவின் அவதாரமான ராமராக பிரபாஸ் நடித்திருந்தார். இந்நிலையில், கல்கி அவதாரத்தையும் ஏன் விட்டு வைப்பானே என இந்த படத்திற்கு டைட்டிலே கல்கி என வைத்து விட்டனர்.

அயன்மேன் மட்டுமில்ல ஏகப்பட்ட ஹாலிவுட் பட வாடை வருது:

சமீபத்தில் வெளியான சலார் படத்தின் டீசர் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள கல்கி படத்தின் க்ளிம்ஸ் காட்சிகளையும் ரசிகர்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஸ்டார் வார்ஸ் மற்றும் ட்யூன் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களின் காப்பியாகவே இந்த படம் உருவாகி வருகிறதா என்கிற கேள்வியை எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

அயன்மேன் மட்டுமில்லை ஒட்டுமொத்த படமே சிஜி செட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் மிக்சர் மசாலா தான் என பங்கம் பண்ணி வருகின்றனர். மேலும், இந்த க்ளிம்ஸில் உலகநாயகன் கமல்ஹாசனை காட்டாமல் பசுபதியை மட்டுமே காட்டி உள்ளார்களே என கமல் ரசிகர்களும் காண்டாகி விட்டனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.