குக்வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை அடிச்சி தூக்கிய பிரபலம்!.. CWC வரலாற்றில் முதன்முறையாக நடந்த சாதனை!…

Published on: July 22, 2023
cwc
---Advertisement---

குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்துவிட்டதாகவும், இது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்றும் சிவாங்கி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. 

sivangi

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, கிரன், ஷிவாங்கி, ஆண்ட்ரியன் ஆகிய 6 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஷிவாங்கி இறுதிப்போட்டி வரை வந்தது பெரும் சர்ச்சையானது. இறுதி போட்டி எபிசோட் வரும் வாரத்தில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

vichithra

இந்நிலையில் தற்போதே அதில் வெற்றி பெற்றவர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் மைம் கோபி தான் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. இரண்டாவது இடத்தை பிடித்தது ஸ்ருஷ்டி என்றும் மூன்றாவது இடத்தை பிடித்தது விசித்ரா என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

mime gopi

குக் வித் கோமாளி வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் தான் ஒரு ஆண் போட்டியாளர் டைட்டில் வென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதல் மூன்று சீசன்களில் வனிதா, கனி மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் டைட்டில் வென்றிருந்தனர். இந்த முறை மைம் கோபி வென்றுள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. எனினும், இந்த தகவல்கள் உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க- பாரதிராஜா பண்ண காரியத்துக்கு தக்க பதிலடி கொடுத்த சரிதா! இப்படியெல்லாம் நடந்துச்சா?

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.