
Cinema News
ரஜினி படத்தில் வரும் சூப்பர் வசனம் சுட்டதா?!.. அதுவும் அந்த நடிகர்கிட்ட இருந்தா?!.. சீக்ரெட் சொன்ன ராதாரவி…
Published on
By
சினிமாவில் ரஜினி பேசும் பன்ச் வசனங்கள் என்பது மிகவும் பிரபலம். ரஜினி பேசும் பன்ச் வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கும். தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் மிகுந்த பன்ச் வசனங்களை எம்.ஜி.ஆருக்கு பின்னர் பேசியவர் ரஜினி மட்டுமே. ஆனால், எம்.ஜி.ஆர் பேசியதை விட ரஜினி பேசிய வசனங்கள் ரசிகர்களிடம் அதிகம் ரீச் ஆகியது. ஏனெனில், சினிமாவில் ரஜினி அதிக பன்ச் வசனங்களை பேசியவர்.
ரஜினி பேசும் பன்ச் வசனங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் ரீச் ஆனது. எனவே, தான் நடிக்கும் படங்களில் அதிக பன்ச் வசனங்கள் வரும்படி ரஜினியும் பார்த்துக்கொண்டார். பாஷா படத்தில் வரும் ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்கிற பன்ச் வசனம் பல வருடங்கள் தாண்டியும் இப்போதும் பேசுகிறார்கள். அதேபோல் ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’, ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்…
நான் தட்டி கேட்பேன், கொட்டி கொடுப்பேன்.. நீ விரும்பினத விட உன்ன விரும்பின ஒருத்தர கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.. இது தானா சேர்ந்த கூட்டம்.. அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழந்ததா சரித்திரமே இல்ல,நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்.. என சினிமாவில் ரஜினி பேசிய வசனங்கள் மிகவும் பிரபலம்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தில் ரஜினியின் நண்பராக சரத்பாபுவும், சரத்பாபுவின் அப்பாவாக ராதாரவியும் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ராதாரவி அடிக்கடி ‘கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்’ என்கிற வசனத்தை அடிக்கடி பேசுவார். ஒரு காட்சியில் இதே வசனத்தை அவரிடம் ரஜினியும் தனது ஸ்டைலில் பேசியிருப்பார். தியேட்டரில் விசில் பறக்கும்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘ அண்ணாமலை படத்தில் நான் பேசிய அந்த வசனம் மிகவும் பிரபலமானது. படிக்காத மேதை என்கிற திரைப்படத்தில் துரைராஜ் என்கிற நடிகர் சிவாஜியை பார்த்து இந்த வசனத்தை சொல்வார். அதைத்தான் நான் எனது ஸ்டைலில் மாடுலேஷனை மாற்றி பேசினேன். அதே வசனத்தை ரஜினி பேசியது அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது’ என சொல்லியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..
Nayanthara: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மக்கள்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...