திருமணத்தால் வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்- பத்திரிக்கையாளர் சொன்ன பரபரப்பு தகவல்!!

Published on: July 23, 2023
meera jasmine
---Advertisement---

விஜய், அஜித், மாதவன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்து ஹிட் கொடுத்துவந்த மீரா ஜாஸ்மின், திடீரென இருந்த இடமே தெரியாமல் போனதுக்கான காரணத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் திடீரென எங்கே போனார் என்றே தெரியவில்லை.

meera jasmin

பல ஆண்டுகள் வெளியே தலை காட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். இவரின் புகைப்படங்களை பார்த்துவிட்டு, இவர் மீண்டும் படங்களில் நடிக்க போகிறார் என்று பேசப்பட்டது.

ஆனால் அவர் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பதால், தற்காலிகமான சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இவர் அடுத்தடுத்து புதிய கீதை, மெர்க்குரி பூக்கள், சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

meera jasmi

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவர் பார்க்க தமிழ் பெண் போல இருப்பதோடு மட்டுமின்றி நன்றாக நடிக்கவும் கூடியவர். இவர் உச்சத்தில் இருக்கும் போதே, திடீரென துபாயில் பணிபுரியும் பொறியாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க மாட்டேன்.

துபாயிலேயே செட்டில் ஆக போகிறேன் என கூறிவிட்டு சென்ற மீரா ஜாஸ்மின், ஒரே ஆண்டில் திருமண வாழ்க்கை பிடிக்காமல் கணவருடனிருந்து பிரிந்து வந்து விட்டார். ஆனால் திருமணமாகிவிட்டதால், யாரும் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். திருமணமானவர் என்பதையே காரணம் காட்டி சினிமாவில் இருந்து அவரை ஓரம் கட்டிவிட்டனர்.

meera jasminee

அந்த சமயத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருந்தால், பல பட வாய்ப்புகள் தேடி வந்திருக்கும் எனவும் அவசர அவசரமாக செய்துகொண்ட திருமணத்தால், பட வாய்ப்புகளும் போய்விட்டது, திருமண வாழ்க்கையும் வீணாகிவிட்டது என்றும் செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- கூடவே இருந்து முதுகில் குத்திய அசோகன்! நிஜத்திலும் வில்லனாகவே இருந்திருக்காருப்பா..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.