பரோட்டாவுக்கு சட்னியா? ஆகவே ஆகாது! கொஞ்சம் கூட கதாபாத்திரத்திற்கு செட் ஆகாத நடிகர்கள்

Published on: July 24, 2023
act
---Advertisement---

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ படங்களை  பார்த்திருக்கிறோம். அது வெற்றிப்படங்களாக இருந்தாலும் சரி தோல்விப் படங்களாக இருந்தாலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். படத்தை போய் பார்த்தால் தான் தெரியும். அது நல்லா இருக்கா? நல்லா இல்லையா? என்று. அப்படி படங்களில் கொஞ்சம் கூட தனக்கு பொருந்தாத கதாபாத்திரத்தில் நடித்து மொக்க வாங்கிய நடிகர்களைத் தான் பார்க்க இருக்கிறோம்.

ரஜினி : ரோபோ, எந்திரன், 2.0 போன்ற படங்கள் வசூல் ரீதியாக வாரி வழங்கினாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது ரஜினிக்கு வயது 60ஆம். ஒரு 60வயது நடிகரை ரோபோவாக காட்டினால் ரஜினி ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் கொள்வார்கள். ஆனால் ஒரு சினிமா ரசிகனாக இருக்கும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அதையும் மீறி சங்கர் இதை செய்தார் என்றால் எல்லாம் வியாபாரத்துக்காகத் தான். முதலில் இந்தப் படம் கமலை வைத்து தான் எடுக்கப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால் அது ரஜினிக்கு மாறியது. வசீகரனை விட ரோபோவாக நடித்த ரஜினி கொஞ்சம் ஓவர்தான்.

rajini
rajini

சிம்பு : தரணி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் ஒஸ்தி. இந்த படம் ஹிந்தியில் தபங் என்ற பெயரில் சல்மான்கான் நடித்திருந்தார். அதைதான் தமிழில் ரீமேக் செய்து எடுத்தார்கள். சல்மான்கான் நடித்த கேரக்டரில் சிம்புவா? கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க முடியவில்லைல. ஆனால் தரணி எப்படி இந்தப் படத்தில் சிம்புவை நடிக்க ஒப்புக் கொண்டார் என்றுதான் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இது தரணி படமாகவும் இல்லை. முற்றிலும் சிம்பு படமாகவே மாறியது. அந்தக் காலத்தில் சிம்புவின் குறுக்கீடுகள் நிறையவே இருக்குமாம். அப்படித்தான் இந்தப் படத்திலும் இருந்ததாம்.

simbu
simbu

கார்த்தி : மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம்தான் காற்று வெளியிடை . இந்தப் படத்தில் யாரும் எதிர்பார்க்காத கார்த்தியை பார்க்க முடிந்தது. இந்தப் படத்திற்கு முன்னாடி வரைக்கும் கார்த்தி படங்களை எடுத்துக் கொண்டால் வாயாலேயே விளையாடியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவரது ஐம்புலன்களையும் அடக்கியிருப்பார் மணிரத்தினம். கார்த்தினாலே அது வாய்தான். அது மிஸ் ஆகும் போது ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். குறிப்பாக இந்தப் படத்தில் கார்த்தி சுத்தமாக செட் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும்.

karthi
karthi

லாரன்ஸ் : மொட்டசிவா கெட்ட சிவா படம். இந்தப் படத்தில் லாரன்ஸ் ஒரு போலிஸாக வந்திருப்பார். மேலும் இந்தப் படம் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும். அதை தமிழில் ரீமேக் செய்யும் போது தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தாற்போல சிலவற்றை மாற்றியிருக்கனும். ஆனால் அதை செய்ய தவறி விட்டார்கள். மேலும் இதற்கு  முன் லாரன்ஸ் காஞ்சனா போன்ற பேய் படங்களில் நடித்து பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் காஞ்சனா ஏதோ போலிஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதை போலத்தான் உணர்வு ஏற்பட்டது. மொத்தத்தில் இந்த கேரக்டருக்கு சுத்தமாக லாரன்ஸ் செட்டே ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

lawrence
lawrence

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.