
latest news
என்னோட அந்த வீக்னெஸ் கெளதமிக்கு மட்டும் தான் தெரியும்.. வெளிப்படையாக பேசிய கமல்ஹாசன்.. இது எப்போ?
Published on
இந்தியன் 2 படத்துக்காக ஒரு பக்கம் இயக்குநர் ஷங்கர் ஹாலிவுட்டின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனத்திடம் எல்லாம் கூட்டணி வைத்து ஏகப்பட்ட வித்தைகளை இந்திய சினிமாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளார்.
அந்த படம் வெளியானால், கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தை தொடர்ந்து இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட் என்பது உறுதி என்பது கன்ஃபார்ம். மேலும், பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான கல்கி படத்திலும் வில்லனாக நடித்து மிரட்ட காத்திருக்கிறார் கமல்.
மேலும், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் 233வது படமும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 234வது படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் தனது ஒரு குறிப்பிட்ட வீக்னெஸ் பற்றி நடிகை கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் என பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்பவும் ரஜினி – கமல் போட்டி தான்:
விஜய், அஜித் போட்டியாக இருந்த தமிழ் சினிமா மீண்டும் ரஜினி – கமல் போட்டி உலகமாக இந்த ஆண்டு மாறியுள்ளது. விக்ரம் படம் 420 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டிய நிலையில், ரஜினிகாந்தின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் விக்ரம் படத்தின் சாதனையை முறியடிக்க ரஜினிகாந்த் முயற்சி செய்து வரும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து அடுத்த கட்டத்திற்கு கமல் சென்றுவிட்டார்.
அதனை சரி கட்டவே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். இந்த வயதிலும் இப்படியொரு ஆரோக்கியமான போட்டி இருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாத் துறையையே வியக்க வைத்து வருகிறது.
கமலோட அந்த வீக்னெஸ்:
எந்தவொரு மனிதனையும் பலவீனமானவாகவும் கெட்டவனாகவும் மாற்றும் ஒரே வீக்னெஸ் என்றால் அது கோபம் தான். நடிகர் கமல்ஹாசனுக்கு கோபம் வந்தால் என்ன பண்ணுவார் என்பது நடிகை கெளதமிக்கு மட்டும் தான் தெரியும் என நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஒருமுறை கெளதமியுடன் கமல் கலந்துக் கொண்ட போது அவரே கூறிய வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கோபம் வந்தால் கமல் என்ன பண்ணுவாரு தெரியுமா?
சூர்யாவை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், கெளதமியுடன் கலந்து கொண்ட கமல்ஹாசன், விஸ்வரூபம் பிரச்சனையின் போது ரொம்பவே கோபத்தில் இருந்தாராம்.
அப்போது என்ன பண்ணுவது என யோசித்த அவர், நேரடியாக அறைக்குள் சென்று படுத்து தூங்கி விட்டாராம். தனக்கு எப்போது கோபம் வந்தாலும், அந்த கோபத்துடன் எங்கேயும் சென்றுவிட்டால் பிரச்சனை பெரிதாகிடும் என்பதால் படுத்துத் தூங்கிவிடுவேன், அந்த ரகசியம் கெளதமிக்கு மட்டும் தான் தெரியும், இப்போ உங்களுக்கு எல்லாம் சொல்றேன் என கமல் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியதை கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என அவரது ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...