அடுத்த ரைசா வில்சனா மாறிய பிக் பாஸ் பிரபலம்.. உதடு பெரிதாக்க போயி இப்போ எப்படி வீங்கிடுச்சு பாருங்க மக்களே!

Published on: July 24, 2023
---Advertisement---

இளம் நடிகைகள் அடிக்கடி தங்கள் உடம்பில் சில பல மாற்றங்களை காஸ்மெடிக்ஸ் சர்ஜரிக்கல் மூலம் மாற்றிக் கொண்டு சினிமாவிலும், சீரியல்களிலும் தங்களை வித்தியாசமாக காட்டிக் கொண்டு நடித்து வருகின்றனர். சிலருக்கு அந்த சிகிச்சைகள் சில சமயங்களில் மோசமான விளைவுகளையும் கொடுத்து விடும்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படத்துக்காக உடல் எடையை குறைத்து சில பல பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் தான் ஓடாகத் தேய்ந்தார் என்று அப்போது சர்ச்சைகள் வெடித்தன. நடிகை நயன்தாரா தனது இடுப்புப் பகுதியில் உள்ள சதைகளை மொத்தமாக குறைக்க அறுவை சிகிச்சைகளையே செய்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலமான ரைசா வில்சன் முகத்தில் செய்த அழகு சிகிச்சை ஆபத்தில் போய் முடிந்து அவரது முகம் விகாரமாக மாறியதை போலவே தற்போது இன்னொரு பிக் பாஸ் பிரபலத்தின் முகமும் கோரமாக மாறி பார்க்கவே சகிக்காமல் மாறிவிட்டது.

பிக் பாஸ் நடிகை: 

இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காமல் போன நடிகை உர்ஃபி ஜாவேத்துக்குத் தான் தற்போது இப்படியொரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் விமானத்தில் சில இளைஞர்கள் குடி போதையில் தப்பாக மேலே தொட்டு விட்டார்கள் என பரபரப்பை கிளப்பிய உர்ஃபி ஜாவேத்துக்கு அடுத்ததாக இன்னொரு பெரிய பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

வீங்கிப் போன உதடு:

நடிகை உர்ஃபி ஜாவேத் அரை குறை ஆடை அணிந்து கொண்டு சகிக்கவே முடியாத அளவுக்கு எல்லை மீறிய கவர்ச்சியில் கண்டபடி திரிந்து வந்த நிலையில், தனது உதட்டினை அழகுப்படுத்த நினைத்து, அதில் ஃபில்லர் பயன்படுத்த சிகிச்சை செய்துள்ளார். ஆனால், அந்த மருத்துவர் அழகான உதடுகள் கிடைத்த நிலையில், அதனை அலங்கோலமான உதடுகளாக மாற்றி நடிகை அழ வைத்து விட்டார்.

 

கண்ணும் வீங்கிப் போச்சு:

உதடு மட்டுமின்றி அவரது கண்களும் சிவந்து வீங்கி விட்டது. ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமான ரைசா வில்சனின் கண்கள் இதே போலத்தான் வீங்கிப் போய் இருந்தன. ஸ்கின் கேர் நிறுவனம் மீது புகாரையும் கொடுத்து சர்ச்சை கிளப்பி இருந்தார் ரைசா வில்சன்.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமும் கவர்ச்சி நடிகையுமான உர்ஃபி ஜாவேத்தின் உதடு மற்றும் கண்கள் மோசமான காஸ்மெடிக் சிகிச்சை காரணமாக எசகு பிசகாக பார்க்கவே சகிக்க முடியாத நிலைக்கு மாறிவிட்ட நிலையில், அதன் போட்டோக்களையும் உர்ஃபி ஜாவேத் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு மருத்துவமனையும் தனக்கு சிகிச்சை அளித்த அந்த மருத்துவரையும் கண்டபடி திட்டி உள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.