விட்ட குறை தொட்ட குறை! ‘லியோ’ படத்தால் நிகழப்போகும் ஒரு அதிசயம் – கௌதம் மேனனுக்கு அடிச்ச பம்பர் ஆஃபர்

Published on: July 24, 2023
vijay
---Advertisement---

கோலிவுட்டில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் நடிகர் விஜய். இப்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் மற்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜயை வைத்து சங்கர் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற வதந்தியும் ஒரு பக்கம் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக வலைப்பேச்சு பிஸ்மி சில கருத்துக்களை கூறினார். அதாவது விஜய் சங்கர் இணையும் கூட்டணி அது விஜயின் 70வது படமாக இருக்க வாய்ப்புள்ளதாக வதந்திகள் வெளியாயின. ஆனால் அது கண்டிப்பாக இல்லை என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.

vijay1
vijay1

மேலும் லியோ படத்திற்கு பிறகு விஜயின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். அது ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில்  முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் அடுத்ததாக 69 வது படம் அடுத்த வருடம் ஜூன் தொடங்கி டிசம்பரில் முடிப்பதாகவும் 70 வது படம் அதற்கு அடுத்ததாகவும் இருக்கும் என்றும் இப்படி லைன் அப்பில் விஜய் வைத்திருக்கிறார் என்று பிஸ்மி கூறினார்.

மேலும் சங்கரும் அடுத்தவருடம் வரை இந்தியன் , கேம் ஜேன்சர் ஆகிய இரண்டு படங்களை வைத்திருப்பதாகவும் அடுத்ததாக வேள்பாரியை கையில் எடுப்பதால் கண்டிப்பாக விஜயின் 70வது படம் சங்கர் இயக்க மாட்டார் என்றும் பிஸ்மி கூறினார். அதே வேளையில் விஜயும் கௌதம் மேனனும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறினார்.

vijay2
vijay2

ஏற்கெனவே கௌதம் விஜயை வைத்து யோகன் அத்தியாயம் 1 என்ற படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கௌதமுக்கும் விஜய் தரப்பிற்கும் ஏதோ சில முரண்பாடுகள் இருக்கவே அந்த படம் அப்படியே டிராப் ஆனதாம். ஆனால் லியோ படத்தில் கௌதம் மேனன் நடிப்பதால் சினிமாவையும் தாண்டி விஜயுடன் ஒரு நல்ல நட்பு உருவானதாம்.

அந்த சமயத்தில் விஜயிடம் மீண்டும் நாம் இணைவோம் என்று  கௌதம் மேனன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருப்பதாக பிஸ்மி கூறினார். இந்த முறை கௌதம் மேனன் வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அவரின் ரேஞ்சே வேறு எங்கேயோ போய்விடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.