Cinema News
முதுகில் குத்திய பிரபல நடிகர்.. விரக்தியில் அப்பாஸ் எடுத்த விபரீத முடிவு.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!…
காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அப்பாஸ், அடுத்து பெரிய ஹீரோவாக வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல, அவரும் பல படங்களில் நடித்தார். ஆனால் வரிசையாக 3 படங்கள் ஃபிளாப் ஆனதால், அவருக்கு மார்க்கெட் போய்விட்டது.
அதன் பிறகும் கூட அவர் படையப்பா, பஞ்சதந்திரம், மின்னலே, ஆனந்தம் உள்ளிட்ட படங்களில் ஏதாவது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். ஹீரோவாக நடிக்காவிட்டாலும், அண்ணன், தம்பி, அமெரிக்க மாப்பிள்ளை என அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த அப்பாஸ், திடீரென காணாமல் போய்விட்டார். பல ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்கவே இல்லை.
காரணம் அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டது தான். இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு போனதற்கு ஒரு நடிகர் செய்த துரோகம் தான் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் அப்பாஸ் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், நல்ல படங்களில் சிறிய கேரக்டர் என்றாலும் பரவாயில்லை என்று நடித்து வந்தார்.
அந்த நேரத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொடுத்த ஐடியாவால், இவர் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி தொடங்கியுள்ளார். இதன் மூலம் பல நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கூட பாடியுள்ளார். அந்த சமயத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பிரச்சனைகள் இருந்ததால், இரு மாநில நடிகர்களிடையே ஆன உறவுகளும், சுமூகமாக இல்லை.
இதனையடுத்து அப்பாஸ் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்து கர்நாடகாவில் இருக்கும் முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து பேசி ஒத்துக்கொள்ள வைத்துள்ளார். பிறகு இந்த நிகழ்ச்சிக்கு எல்லா ஏற்பாடுகளையும் இவர் செய்து முடித்துள்ளார். ஆனால் அதன் பிறகு ஒரு தமிழ் நடிகர் இவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி, இவரை ஓரம்கட்டி, எல்லா பொறுப்புகளையும், வெவ்வேறு மாநில நடிகர்களை ஒன்றிணைத்ததற்கான பெருமையையும் அவர் தட்டிச்சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த அப்பாஸ், வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத போது கூட, கிடைக்கும் கேரக்டர்களில் நடித்துக்கொண்டு, வேறு தொழில் தொடங்கி முன்னேற நினைத்த அப்பாஸ், துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.