Connect with us
ajith

Cinema News

பிரபலம் கொடுத்த நெருக்கடி! – விஜய் படத்திலிருந்து அஜித் விலக காரணம் இதுதானா?..

தமிழ் சினிமாவில் அஜித்தின் வளர்ச்சியை ஒரு அதிசயமாகத்தான் அனைவரும் பார்த்து வருகிறார்கள். இன்று ஒரு அல்டிமேட் ஸ்டாராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல அஜித் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை. எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதுமில்லை. ரசிகர்களை சந்திப்பதுமில்லை. பொது இடங்களிலும் பார்க்க முடிவதில்லை. அப்படி இருந்தும் அஜித்தின் மீது பைத்தியமாக இருக்கும் ரசிகர்கள் உருவாக காரணம் என்ன என்பதைதான் அனைவரும் கேட்கின்றனர்.

ajith1

ajith1

விஜய், ரஜினி உட்பட ஒரு சில முன்னனி நடிகர்கள் கூட அவ்வப்போது பொது வெளியில் வந்து சந்திக்கின்றனர். ஆனால் அஜித்தை விமான  நிலையத்தில் மட்டும்தான் பார்க்க முடிகின்றது. அப்படி தனக்கு தானே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகின்றார் அஜித். இருந்தாலும் அவருடன் பழகியவர்கள், நெருக்கமாக இருந்த நடிகர்கள் என அஜித்தை பற்றி சொன்னால்தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

இதையும் படிங்க : இளையராஜா மேல் இப்படி ஒரு பாசமா? ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்து பேசிய மாரிமுத்துவை பந்தாடிய ராஜ்கிரண்

இந்த நிலையில் அஜித்தை பற்றி பிரபல நடிகர் மாரிமுத்து சில விஷயங்களை பகிர்ந்தார். வாலி, ஆசை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறாராம் மாரிமுத்து. அவர் அஜித்தை ஒரு தாய்ப்பால் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தாய்ப்பாலில் யாரும் கலப்படம் கலக்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு தூய்மையான மனிதர் அஜித் என்று கூறினார்.

ajith2

ajith2

மேலும் நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித்தான் நடித்தார். ஏன் அவருக்கு பதிலாக சூர்யா வந்தார் என்ற காரணத்தையும் முதன் முதலாக கூறியிருக்கிறார். நேருக்கு நேர் படத்திலும் மாரிமுத்து உதவியாளராக பணிபுரிந்திருக்கிறாராம். முதல் நாள் 10 நாள்கள் அஜித்தான் நேருக்கு நேர் படத்தில்  நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் அவர் காதல்கோட்டை என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்தார்.

அதன் காரணமாக அஜித் மிகவும் பிஸியாக இருந்தாராம். அதுமட்டுமில்லாமல் சொந்த விஷயங்கள் சிலவற்றிலும் மன உளைச்சலிலும் இருந்தாராம். மேலும் நேருக்கு நேர் படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தான் தயாரித்ததாம். ஒரு பக்கம் மணிரத்தினமும் சுஹாசினியும் அஜித்திற்கு சில நெருக்கடிகள் கொடுத்தார்களாம்.

ajith3

ajith3

அதன் காரணமாகத்தான் அஜித் அந்தப் படத்தில் தொடர முடியாமல் போனதாம். அஜித்திற்கு பிறகு அந்தப் படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்கலாமா என்று யோசித்தார்களாம். ஆனால் பிரசாந்த் ஜீன்ஸ் படத்திற்காக கமிட் ஆகியிருந்தாராம். பிரபுதேவாவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் பிரபுதேவா இன்னொரு ஹீரோ ரிஜக்ட் செய்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க : நயன்தாரா கல்யாணத்திற்கு காரணம் அட்லீயா? பயத்தில் விக்னேஷ் சிவன் போட்ட டீல்- பிரபலம் சொன்ன பகீர் தகவல்..

அதன் பிறகு தான் சிவக்குமாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவர் அழகாக இருக்கிறார் எனவும் சரவணா என்ற சூர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். ஆனால் முதலில் சிவக்குமார் மறுத்தாராம். என்னுடனேயே சினிமா போகட்டும். அவன் நடிக்க மாட்டான் என்று சொல்லியிருக்கிறார். எப்படியோ சிவக்குமாரை சம்மதிக்க வைத்து அந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இப்படி பல சுவாரஸ்ய தகவல்களை மாரிமுத்து கூறினார்.

ajith4

ajith4

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top