சினிமா ஆசையில் நடிக்க வந்து ஃபிளாப் ஆன தொழிலதிபர்கள்!.. கம்முன்னு அதையே பாக்கலாம்!..

Published on: July 26, 2023
rk suresh sarathkumar
---Advertisement---

நடிகர்கள் படத்தில் நடித்து சம்பாரித்து, அந்த பணத்தை வைத்து வேறு ஏதாவது தொழில் தொடங்குவதை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில தொழிலதிபர்கள், சினிமா மீது உள்ள ஆசையால் படங்களில் நடிக்க வந்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் நுழைந்த 5 தொழிலதிபர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

பவர் ஸ்டார் சீனிவாசன்

power star

அக்குபஞ்சர் டாக்கடரான இவர், சென்னையில் லத்திகா மருத்துவமனை என்ற பெயரில் ஹாஸ்பிட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.  அந்த மருத்துவமனையில் இவரை பார்த்த ஒருவர் நல்லா வெள்ளையா, கலரா ஹீரோ மாதிரி இருக்கீங்க என்று கூறியதும் அவரே தயாரித்து, நடித்து லத்திகா என்ற படத்தை வெளியிட்டார். அந்த படம் சரியாக ஓடவில்லை. ஆனால் அதற்கடுத்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

ஆர்.கே.சுரேஷ்

suresh

ஸ்டார் ரெசிடன்சி என்ற 5 நட்சத்திர ஹோட்டலின் உரிமையாளர் தான் இந்த ஆர்.கே.சுரேஷ்.மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அதன் பிறகு தான் சினிமா மீதிருந்த ஆர்வத்தால், முதலில் விநியோகஸ்தராகி, பிறகு தயாரிப்பாளராகி அதன் பிறகு நடிகராகியுள்ளார் ஆர்.கே.சுரேஷ். 

லெஜெண்ட் சரவணன்

legend saravanan

இவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் தான் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஓனர். பல ஆண்டுகளாக கோடிகளில் புரண்டுவரும் இவர், சமீபத்தில் தான் சினிமாவில் குதித்துள்ளார். இவரே தயாரித்து, நடித்த லெஜெண்ட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

ஆர்கே ( ராதாகிருஷ்ணன்)

rk

எல்லாம் அவன் செயல், அழகர் மலை, என் வழி தனி வழி, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆர்கே. இவர் ஆரம்ப காலத்தில் எம்எல்எம் ஒன்றை நடித்தி வந்தார், மேலும் வெல்கம் சிட்டி என்ற ரியல் எஸ்டேட் கம்பெனியும், விஐபி ஹேர் கலர் ஷாம்பூ நிறுவனமும் இவருடையது தான்.

சேதுராமன் 

sethuraman

கண்ணா லட்டு திண்ண ஆசையா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சேதுராமன். மருத்துவரான இவர் சென்னையில் ZI கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார். இவர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார்.

சரத்குமார்

sarath

சரத்குமார் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியும் தான். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இவர் ஒரு பத்திரிக்கையாளராக பணியாற்றிய இவர், பின்னர் ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்து பிரபலமானார் சரத்குமார்.

இந்த லிஸ்ட்டில் சரத்குமார் மட்டுமே நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பல திரைப்படங்களில் நடித்தார். பவர் ஸ்டார் சீனிவாசன் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைத்தார். மற்ற யாரும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.