Connect with us
santana

Cinema News

எல்லாரும் என்னை திட்டினாங்க!. நான்தான் கேட்கல!.. மார்கெட் போனபின் புலம்பும் சந்தானம்!..

நடிகர் சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகழின் உச்சத்தில் இருந்தார். பல மொக்கை படங்கள் கூட இவரின் காமெடிக்காவே ஹிட்டானது. பல முன்னணி ஹீரோக்கள் இவருடன் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு மிகவும் பிசியாக, கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் இவர் நடித்துக்கொண்டிருந்தார்.

இவர் வேறு படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் என்றால், சில ஹீரோக்கள் படப்படிப்பையே தள்ளி வைத்துவிட்டு, இவருக்காக காத்திருந்தனர். அந்த அளவிற்கு காமெடி உலகின்  உச்சத்தில் இருந்தார் சந்தானம். யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென ஹீரோவாக மாற முடிவெடுத்தார். ஆரம்பத்திலிருந்தே பெரிதாக படங்கள் ஓடவில்லை.

santanamm

இவரும் என்னவெல்லாமோ முயற்சித்து பார்த்து ஓய்ந்துவிட்டார் என்றே கூறலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில், மீண்டும் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்க தயார் என்று கூறியிருந்தார். ஹீரோவாக நடித்தாலும், பெரும்பாலும் காமெடி ஹீரோவாக தான் நடிக்கிறார். இருந்தாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

santanam

இந்நிலையில்  தான் இனி காமெடி நடிகராக இருக்க போவதில்லை. ஹீரோவாக மட்டுமே நடிக்க போகிறேன் என்று அறிவித்த பிறகு, பல ஹீரோக்கள் எனக்கு அழைத்து திட்டினார்கள் என்று சந்தானம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கார்த்தி, ஆர்யா, ஜீவா, சிம்பு உள்ளிட்ட பல ஹீரோக்கள் இனிமே காமெடி நடிகாராக நடிக்கவே மாட்டேன் என்ற முடிவை நீங்கள் எடுத்திருக்க கூடாது என்று கூறினார்கள். நான் தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சந்தானம்.

santhanm

மேலும் ஆர்யா பாஸ் என்கிற பாஸ்கரன் போலவே ஒரு கதையை தேடிக்கொண்டிருக்கிறார். ஒரு நல்ல கதை கிடைத்தால், அதில் நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக நடிப்போம் என்றும் நயன்தாராவும் அந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தானம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
prabhanjani
Continue Reading

More in Cinema News

To Top