Connect with us
bharathi raja

Cinema News

எவ பேச்சக்கேட்டு என்னை தூக்குனீங்க!.. பாரதிராஜாவிடம் எகிறிய வடிவுக்கரசி.. படப்பிடிப்பி்ல் நடந்த பஞ்சாயத்து!…

தமிழ் சினிமாவில் மண்வாசனை மிக்க திரைப்படங்களை இயக்கியவர் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் இயங்கிய சினிமாவை கைப்பிடித்து வெளியே அழைத்து வந்து கரட்டு மேட்டை காட்டியவர் இவர். கிராமத்து மக்களின் அன்பு, கோபம், காதல், ஆத்திரம், பகை, உறவுமுறை என எல்லாவற்றையும் தனது திரைப்படங்களில் கொண்டு வந்தவர். பதினாறு வயதினிலே படத்தில் துவங்கிய இவரின் திரைப்பயணம் இன்னமும் முடியவில்லை.

நகரத்தை அடிப்படையாக கொண்டே படங்கள் உருவாகி ஓடிக்கொண்டிருந்த நேரத்திலும் கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து கதையில் படம் இயக்கி வெற்றியை பார்த்தவர் இவர். பாசமலர் போல இந்த படமும் அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அண்ணனாக விஜயகுமாரும், அவரின் தங்கையாக ராதிகாவும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ராதிகாவின் கணவராக வரும் நெப்போலியன் ஒரு கட்டத்தில் விஜயகுமாரை தவறாக புரிந்துகொண்டு அவருக்கு எதிரியாக மாறுவார். அதன்பின் ராதிகாவுக்கும், விஜயகுமாருக்கும் நடக்கும் பாசப்போராட்டமே இப்படத்தின் கதை.

இதையும் படிங்க: நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

1993ம் வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜயகுமாருக்கு மனைவி இருப்பது போலவும், அதில் வடிவுக்கரசியை நடிக்க வைக்கவும் பாரதிராஜாவுக்கு எண்ணம் இருந்தது. ஆனால், அந்த எண்ணத்தை அவர் கைவிட்டார். அதனால் அவர் வடிவுக்கரசியின் கோபத்திற்கும் ஆளானார்.

kialkku

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய வடிவுக்கரசி ‘ பாரதிராஜா படத்தில் நடிக்க அழைக்கவும் ஆசையோடு ரயில் ஏறி படப்பிடிப்பு தளத்திற்கு போனேன். அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதால் எல்லோருக்கும் சாக்லேட் வாங்கி கொண்டு சென்றேன். பாரதிராஜா உள்ளிட்ட எல்லோரும் கொடுத்த பின் பாராதிராஜா என்னை அழைத்து ‘இந்த படத்தில் விஜயகுமாருக்கு ஜோடி வேண்டாம் என நினைக்கிறேன். அவர் தனியாக இருந்தால்தான் ரசிகர்களுக்கு அவர் மீது சிம்பதி வரும்’ என சொன்னார்.

vadivukarasai

எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘இதை எப்போது முடிவெடுத்தீர்கள்?’ என கேட்டேன். ‘நேத்து நைட்டுதான் இதை யோசித்தேன்’ என அவர் சொல்ல நானோ ‘நான் ரயில் ஏறதுக்கு முன்னாடி சொல்லி இருக்கலாம்ல.. எவ பேச்சக்கேட்டு என்னை தூக்குனீங்க’ என கத்த துவங்கிவிட்டேன். என்னை சமாதானம் செய்ய அவர் முயன்றார். ஆனால், சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்’ என வடிவுக்கரசி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top