
Cinema News
என்னது ‘வணங்கான்’ திரைப்படம் இந்தக் கதையா? இதுக்குப் போயா சூர்யாவை ஓட விட்டாரு?
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றது வணங்கான் திரைப்படம். இந்த திரைப்படத்தின் 70% படப்பிடிப்புகள் முடிந்து இன்னும் 28 நாட்களே படப்பிடிப்பு இருக்கின்றதாம். சமீப காலமாக பாலாவின் செயல்பாடுகளில் கொஞ்சம் மாற்றங்கள் தெரிவதாக சொல்லப்படுகிறது.
அதன் விளைவு தான் முழுமூச்சுடன் இந்த வணங்கான் திரைப்படத்தை எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் அருண் விஜயை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. முதலில் சூர்யாவை வைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் சிறிது நாட்கள் நடைபெற்றது.

surya1
கன்னியாகுமரியில் சூர்யாவை வைத்து படப்பிடிப்பை நடத்திய பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே சில சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதாவது சூர்யாவை ஓட ஓட வைக்கிறார் என்றும் மரியாதை குறைவாக பேசுகிறார் என்றும் அதன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தன என்றும் சொல்லப்பட்டது.
ஒரு கட்டத்தில் இனி பாலாவுடன் சேர்ந்து இந்த படத்தை தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்த சூர்யா அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் இந்த வனங்கான் திரைப்படத்தை அவரின் 2d நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. அந்த தயாரிப்பு பணியையும் முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க : கேப்டனுக்கு பிறகு அஜித்தை கொண்டாடப்போகும் மதுரை மக்கள் – என்ன விஷயம் தெரியுமா?
அதன் பிறகு தான் இந்த படத்தில் அருண் விஜய் இணைந்தார். மேலும் பாலாவே இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். அருண் விஜயையும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம். இதை எடுத்து அருண் விஜய்க்கு இயக்குனர் அறிவழகன் உடன் சேர்ந்து ஒரு படத்தில் இணைய வாய்ப்பு வந்திருக்கிறது.ஏற்கனவே அருண் விஜயையும் அறிவழகனும் குற்றம் 23 என்ற படத்தின் மூலம் இணைந்தார்கள்.

surya2
இந்த நிலையில் இந்த வணங்கான் திரைப்படத்தின் கதை எப்படிப்பட்ட கதை என்ற ஒரு சிறிய தகவல் வெளியாகி இருக்கின்றதாம். அதாவது அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த வணங்கான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நினைத்து கூட பார்க்க முடியவில்லை .பாலாவின் இயக்கத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒரு படமா? என்று.