Cinema News
ஐய்யோ கைவசம் இந்த தொழில் வேற வச்சிருக்காரா? சினிமாவிற்கு பிறகு தனுஷின் சாய்ஸ் இதுதான் போல
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப தனுஷ் தனது ஆரம்ப காலங்களில் ஒரு துரும்பையும் விட மிகவும் மோசமான விமர்சனங்களால் தாக்கப்பட்டார். ஆனால் அப்பொழுது யாருக்குமே தெரியாது இந்த துரும்பு தான் வருங்கால சினிமாவின் இரும்பாக மாறப் போகிறது என்று. யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு வளர்ச்சி. அதுவும் இந்த 40 வயதில் இவர் அடைந்திருக்கிறார் என்றால் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கிட்டத்தட்ட 49 படங்களை முடித்து 50ஆவது படத்தில் அடி எடுத்து வைக்கிறார் தனுஷ். அதுவும் தன்னுடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்கிறார். இந்த சின்ன வயதில் இந்த அளவு பக்குவம் எப்படி வந்தது என அனைவருமே வியந்து பார்க்கின்றனர். சினிமாவையும் தாண்டி அவரிடம் இருக்கும் பல நல்ல விஷயங்கள் இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகுக்கு தெரிய வருகின்றது.
புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை சமீப காலமாக தொடர்ந்து வரும் தனுஷ் பல நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நாள்தோறும் படித்து வருகிறாராம். அதற்காக சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் ஆயிரக் கணக்கான புத்தகங்களை வாங்கி தன்னுடைய லைப்ரரியில் நிரப்பி விடுவாராம். அடுத்த புத்தகக் கண்காட்சி வருவதற்குள் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்து முடித்து விடுவாராம் தனுஷ்.
அதுமட்டுமில்லாமல் செல்போன் பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிர்த்து வருகிறாராம். தன்னை யாராவது அணுக விரும்பினால் தன்னுடைய நண்பர் ஒருவரின் மூலம் தொடர்பு கொள்ள சொல்கிறாராம் தனுஷ். அந்த அளவுக்கு செல்போன் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் தனுஷ்.
இதையும் படிங்க : மீண்டும்.. மீண்டுமா!.. ஜெயிலர் 3வது சிங்கிளும் முட்டு சந்தில் விஜய்யை வைத்து பொளக்குதா?..
இந்த நிலையில் இவரைப் பற்றிய ஒரு தெரியாத விஷயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷிற்க்கு சமைப்பது என்பது மிகவும் பிடிக்குமாம். அது மட்டும் இல்லாமல் அவருடைய ஃபேவரைட் டிஷ் வெஜிடேரியன் உணவுகள் தானாம். மேலும் தனுஷின் அம்மா அவருக்கு சமையலும் சொல்லிக் கொடுத்திருக்கிறாராம்.
தனுசுக்கு பூண்டு குழம்பும் உருளைக்கிழங்கு பொரியலும் தான் மிகவும் பிடித்தமான உணவாம். மேலும் பிரைட் ரைஸ்,ஆம்லெட் ,சாண்ட்விச் போன்ற உணவுகளையும் மிக நன்றாக சமைப்பாராம். ஒருவேளை நடிப்பு வரவில்லை என்றால் கண்டிப்பாக சமையல் கலை நிபுணராகத்தான் சென்று இருப்பேன் என அப்பவே ஒரு பேட்டியில் கூறினாராம் தனுஷ்.