நடிகையை அந்த விஷயத்துக்காக டார்ச்சர் செய்தாரா மக்கள் செல்வன்? அடிமடியிலயே கைவச்சா சும்மா விடுவோமா?

Published on: July 27, 2023
sethu
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு அன்பான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒரு சில நடிகர்களிடம் போய் நின்னால் அது கிடைக்கும் இது கிடைக்கும் என வெவ்வேறு மாதிரியான சில விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் விஜய் சேதுபதியிடம் அளவுக்கு அதிகமான அன்பு கிடைக்கும் என்றுதான் சொல்வார்கள். அதுவும் விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றால் கட்டி அணைத்து முத்தம் கொடுக்காமல் விடமாட்டார்.

sethu1
sethu1

அந்த அளவுக்கு தன்னை தேடி வரும் அனைவரையுமே சமமாக பாவித்து எல்லோரிடத்திலும் அன்பு கொண்டு நடப்பவர். மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி இப்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : எந்த தாயும் அனுபவிக்காத வேதனை! சில்க் விஷயத்தில் நடந்த மோசமான சம்பவம் – தற்கொலைக்கு இதுதான் காரணமா?

ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி வில்லன் அவதாரம் எடுத்து முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான வில்லனாகவே இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். ஹிந்தியில் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

sethu2
sethu2

அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடிக்கிறார். இந்த நிலையில் கோலிவுட்டில் எப்படி பல நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை குறித்து வெளிப்படையாக பயில்வான் பேசுகிறாரோ அதேபோல பாலிவுட்டிலும் ஒரு விமர்சகர் இருக்கிறார் அவர் பெயர் உமைர் சந்து.

இவர் ஓவர் சீசில் உள்ள சென்சார் போர்டில் மெம்பராகவும் இருக்கிறாராம். பிரபல திரை விமர்சகராக இருக்கும் உமைர் சந்து நடிகர் விஜய் சேதுபதியை பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ள மேரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்திருக்கும் கேத்தரினா கைஃப் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை எனவும் தென்னிந்திய நடிகரான விஜய் சேதுபதி இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கேத்ரீனாவை செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் வெளிப்படையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

sethu3
sethu3

ஏற்கனவே பல நடிகைகளை பற்றி பேசி வரும் இவர் அண்மையில் நடிகை பூஜா ஹெக்டேவை பற்றியும் பேசியிருந்தார்.  எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாத மன உளைச்சலில் பூஜா தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறியிருந்தார். இதனால் கோபம் கொண்ட பூஜா ஹெக்டே தன்னை பற்றி அவதூறாக பேசி வரும் உமைர் சந்துவுக்கு எதிராக ஒரு வக்கீல் நோட்டீசையும் அனுப்பி இருந்தாராம். பூஜா ஹெக்டே அனுப்பிய அந்த வக்கீல் நோட்டீஸையும் தனது twitter பக்கத்தில் உமைர் சந்து பதிவிட்டிருந்தாராம்.  இப்போது விஜய் சேதுபதியையும் வம்புக்கு இழுத்த உமைர் சந்துவை கண்டிப்பாக மக்கள் செல்வன் சும்மா விட மாட்டார் என  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐய்யோ கைவசம் இந்த தொழில் வேற வச்சிருக்காரா? சினிமாவிற்கு பிறகு தனுஷின் சாய்ஸ் இதுதான் போல

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.